ADVERTISEMENT

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் படத்திற்கு கனிமொழி எம்.பி. மரியாதை!

01:23 PM Jan 30, 2024 | prabukumar@nak…

நடிகர், தேமுதிக நிறுவனத் தலைவர் மற்றும் முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக இருந்த விஜயகாந்த், கடந்த டிசம்பர் மாதம் 28 ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இவரது மறைவு தமிழக மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி இருந்தது. அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், ரசிகர்கள், பொதுமக்கள் எனப் பலரும் இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்திருந்தனர்.

ADVERTISEMENT

மேலும், விஜயகாந்த்தின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொள்ள இயலாத அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் எனப் பலரும் தேமுதிக தலைமை அலுவலகத்தில் உள்ள நினைவிடத்திற்குச் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதேபோன்று சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில், விஜயகாந்த் உருவப் படத்திற்கு மரியாதை செய்து, விஜயகாந்த்தின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

ADVERTISEMENT

அந்த வகையில், மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் படத்திற்கு, திமுக துணைப் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி தனது தாயார் ராசாத்தி அம்மாளுடன் விஜயகாந்த் வீட்டிற்கு சென்று மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து விஜயகாந்த் குடும்பத்தினருக்கு தனது ஆறுதலையும் இரங்கலையும் தெரிவித்தார். அப்போது விஜயகாந்த்தின் மனைவி பிரேமலதா, மகன் விஜய பிரபாகரன் ஆகியோர் உடன் இருந்தனர். முன்னதாக சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில், மறைந்த விஜயகாந்த்தின் திருவுருவப் படத்தை, விஜயகாந்த்தின் மனைவியும், தேமுதிக பொதுச் செயலாளருமான பிரேமலதா விஜயகாந்த் கடந்த 24 அம் தேதி (24-01-2024) மாலை 4 மணிக்கு திறந்து வைத்தது குறிப்பிடத்தக்கது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT