ADVERTISEMENT

“ரவிக்குப் பதிலாக ‘புவி’ன்னு வச்சுப்பீங்களா” - ஆளுநரை விமர்சித்த கமல்

09:06 AM Jan 07, 2023 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ரவி, "தமிழகத்தில் ஒரு வித்தியாசமான அரசியல் சூழல் உள்ளது. எல்லாவற்றுக்கும் நாங்கள் திராவிடர்கள் என்று சொல்கிறார்கள். இந்தியா முழுவதும் ஒரு செயல்திட்டம் இருந்தால், அதனை வேண்டாம் என்கிறது தமிழ்நாடு. முதலில் தமிழ்நாடு என்று சொல்வதை விடத் தமிழகம் என்று சொல்வதுதான் சரியாக இருக்கும். ஆங்கிலேயர்கள் காலத்தில்தான் மாநிலங்கள் உருவாக்கப்பட்டது. பாரதத்தின் பகுதியே தமிழகம். தமிழகம் பாரதத்தின் அடையாளம்" என்று தெரிவித்திருந்தார்.

ஆளுநர் ரவியின் இந்தக் கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் எனப் பல தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் கிளம்பியது. அதுமட்டுமல்லாமல் இணையவாசிகள் பலரும் ‘தமிழ்நாடு’ என்று குறிப்பிட்டு ஆளுநர் ரவியின் கருத்திற்கு எதிராக கடும் விமர்சனங்களை வைத்து வருகின்றனர். இதனால் தமிழ்நாடு என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்ட் ஆனது.

இந்நிலையில் இது குறித்து பேசிய மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன், "நீண்ட நெடிய போராட்டத்திற்கு பிறகு நமக்கு தமிழ்நாடு என்ற பெயர் கிடைத்துள்ளது. இதனை மாற்றச் சொல்ல கவர்னர் யார்? அவருடைய பெயரை ரவி என்பதற்குப் பதிலாக புவி என்று மாற்றச் சொன்னால் மாற்றிக்கொள்வாரா? என கடுமையாக விமர்சித்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT