Skip to main content

'மாநிலங்களுக்கென தனியாக கலாச்சாரம் என்பதே கிடையாது'-ஆளுநரின் அடுத்த சர்ச்சை

 

NN

 

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்கனவே திருக்குறள் மொழிபெயர்ப்பு, சனாதனம் உள்ளிட்ட தலைப்புகளில் பேசிய பேச்சுக்கள் சர்ச்சையை கிளப்பியிருந்தது. இதற்கு பல்வேறு அரசியல் தலைவர்களிடமிருந்து கண்டனங்களும் வந்தது. அண்மையில் சிதம்பரம் நடராஜர் கோவில் குழந்தைகள் திருமண விவகாரம் தொடர்பாக அவர் பேசியிருந்தது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

 

இந்தநிலையில் ஆளுநரின் பேச்சு மீண்டும் ஒரு சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. 'மாநிலங்களுக்கென தனி கலாச்சாரம் கிடையாது' என அவர் பேசி இருப்பதே இந்த சர்ச்சைக்கு காரணம்.

 

தெலுங்கானா மாநிலம் உருவான தினத்தை முன்னிட்டு சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற கொண்டாட்டத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார். அப்பொழுது பேசிய அவர், ''மாநிலத்திற்கு என்று தனியாக கலாச்சாரம் என்ற ஒன்றே கிடையாது. இதுபோன்ற கற்பனை அடையாளங்கள் நம் நாட்டின் வலிமையை குறைக்கிறது. இந்தியாவில் மாநிலங்கள் உருவானது துரதிஷ்டவசமாக அரசியல் அடையாளமாக மாறிவிட்டது'' என்று பேசினார். அவரின் இந்தப் பேச்சுதான் புது சர்ச்சையை கிளப்பியிருக்கிறது.

 

 

 

இதை படிக்காம போயிடாதீங்க !