Skip to main content

டாஸ்மாக் குடோன் சுமைப்பணித் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

Published on 14/09/2017 | Edited on 14/09/2017
டாஸ்மாக் குடோன் சுமைப்பணித் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்



புதுக்கோட்டையில் உள்ள அரசு மதுபானக் குடோன் சுமைப்பணித் தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியறுத்தி புதன்கிழமையன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுபானப் பெட்டிகளை ஏற்றி, இறக்குவதற்கான கூலியை உயர்த்தி வழங்க வேண்டும். நிர்வாகத்தால் பிடிக்கப்பட்டுள்ள பி.எப். பணத்தை உரிய நேரத்தில் அலுவலகத்தில் செலுத்தி அதற்கான ரசீதுகளை தொழிலாளர்களிடம் வழங்க வேண்டும். மதுபானக் குடோன்களில் தொழிலாளர்களுக்கு ஓய்வறை, குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித்தர வேண்டும். என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் டாஸ்மாக் குடோன் சுமைப்பணித் தொழிலாளர் சங்கத்தின்(சிஐடியு) புதுக்கோட்டை கிளைத் தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி சிஐடியு மாவட்டத் துணைத் தலைவர்கள் ப.சண்முகம், எம்.ஜியாவுதீன், சுமைப்பணித் தொழிலாளர் சங்கத்தின் மாவட்டப் பொதுச் செயலாளர் செ.பிச்சைமுத்து உள்ளிட்டோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான தொழிலாளர்கள் பங்கேற்றனர்.

-இரா. பகத்சிங்

சார்ந்த செய்திகள்