ADVERTISEMENT

மது போதையில் அட்டகாசம்; ஓய்வு பெற்ற சப் இன்ஸ்பெக்டர் மனைவி மீது தாக்குதல்

04:12 PM Nov 15, 2023 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள கீழ் காங்கேயன் குப்பம் இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் புகழேந்தி(61). இவர் காவல்துறையில் சப் இன்ஸ்பெக்டர் ஆக இருந்து ஓய்வு பெற்று, தற்போது இவர் அப்பகுதியில் உள்ள இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான அய்யனார் கோவிலில் இரவு காவலராக பணி செய்து வருகிறார்.

இவர் கடந்த 11ஆம் தேதி இரவு அவரும் அவரது மனைவியும் வழக்கம் போல் கோவிலைப் பூட்டிவிட்டு வீட்டுக்கு புறப்படுவதற்கு தயாராக இருந்தனர். அப்போது கோவில் மின்சார விளக்குகளை அணைத்த போது, கோயில் கருவறை பின்புறம் அமர்ந்து மது குடித்துக் கொண்டிருந்த அதே பகுதியைச் சேர்ந்த விமல்ராஜ்,சதீஷ், தயாநிதி, துரை, ஆகியோர் காவலர் புகழேந்தியை தகாத வார்த்தைகளால் திட்டி எதற்கு கோவில் லைட்டை நிறுத்துகிறாய் நாங்கள் மது குடிப்பதற்கு வெளிச்சம் வேண்டும் என்று கூறியுள்ளனர்.

கோவிலுக்குள் இது போன்ற அருவருப்பான செயல்களை செய்யக்கூடாது என புகழேந்தியும் அவரது மனைவியும் கூறியுள்ளனர். அப்போது மேற்படி நால்வரும் அருவருப்பான வார்த்தைகளால் திட்டியபடி புகழேந்தியை தாக்கியுள்ளனர். இதைக் கண்டு பதறிப்போன அவரது மனைவி அவர்களிடம் இருந்து தனது கணவரை தடுத்து மீட்பதற்கு போராடி உள்ளார். அப்போது பெண் என்று பாராமல் அவரது சேலையையும் பிடித்து இழுத்து அவர் மீதும் தாக்குதல் தாக்கியுள்ளனர் அவர்களிடம் இருந்து இருவரும் தப்பி ஓடி முத்தாண்டி குப்பம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அவர்களின் புகாரின் பேரில், காடாம்புலியூர் இன்ஸ்பெக்டர் ராஜ தாமரை பாண்டியன், முத்தாண்டி குப்பம் சப் இன்ஸ்பெக்டர் சாந்தா ஆகியோர் வழக்கு பதிவு செய்து கோவில் காவலராக பணி செய்யும் புகழேந்தி மற்றும் அவரது மனைவியை தாக்கிய விமல்ராஜ் உட்பட நான்கு பேர் மீதும் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்வதற்காக, தீவிரமாக தேடி வருகின்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT