The wife who husband and buried him in a banana orchard ... 9 months later, the known background of Incident

Advertisment

கடலூரில் கணவனை கொன்று புதைத்த மனைவியை போலீசார் ஒன்பது மாதங்களுக்கு பிறகு கைது செய்துள்ளனர்.

கடலூர் மாவட்டம் எஸ்.புதுக்குப்பத்தைச் சேர்ந்தவர் ராஜசேகர். இவரது மனைவி விஜயலட்சுமி. கடந்த ஒன்பது மாதத்திற்கு முன்பு விஜயலட்சுமி தனது கணவர் ராஜசேகர் காணாமல் போனதாக போலீசாரிடம் தகவல் கொடுத்துள்ளார் . அதனடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். விஜயலட்சுமி வேறொரு நபருடன் தவறான தொடர்பு வைத்திருந்ததாகவும் அதனை தட்டிக்கேட்ட தனது அண்ணனை விஜயலட்சுமிதான் கொன்றுவிட்டார் என ராஜசேகரின் சகோதரர் நடுவீரப்பட்டு காவல் நிலையத்தில் புகாரளித்த நிலையில் போலீசார் விஜயலட்சுமியிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் மோகன் என்ற நபருடன் ஏற்பட்ட முறையற்ற தொடர்பை கண்டித்த கணவரைக் கொன்று வாழைத்தோப்பில் புதைத்ததாக விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.

 The wife who husband and buried him in a banana orchard ... 9 months later, the known background of Incident

இந்த சம்பவத்தில் மோகன் என்ற அந்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.