/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-1_2505.jpg)
கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகேயுள்ள சிறுபாக்கம் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ஜம்புலிங்கம் தலைமையிலான போலீசார் டிசம்பர் 25-ஆம் தேதி இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது நள்ளிரவு 2:00 மணியளவில் சிறுப்பாக்கம் அடுத்த மாங்குளம் ‘வே பிரிட்ஜில்’ எடை போட்டு கொண்டிருந்த லாரியை சோதனைசெய்து விசாரித்தனர்.
விசாரணையில், ரேஷன் அரிசி கடத்தப்படுவது தெரியவந்தது. அரிசி கடத்தியவர்கள் வேப்பூர் வட்டம், மங்களூர் கிராமத்தைச் சேர்ந்த சித்திரைவேல் என்பவரது மகன் வேல்முருகன்(29), மாரிமுத்து என்பவது மகன் ராமலிங்கம்(56), வேலூர் மாவட்டம், அரிவூர்குப்பத்தைச் சேர்ந்த உலகமூர்த்தி என்பவரது மகன் லாரி டிரைவர் புருஷோத்தமன், கோவிந்தன் மகன் கிளீனரான பெருமாள்(36), வேலூர் மாவட்டம், சங்கரன்பாளையத்தைச் சேர்ந்த மணி என்பவரது மகன் ராமச்சந்திரன் (51) என்பதும் தெரியவந்தது.
இவர்கள், வேப்பூர் அடுத்த விளம்பாவூரில் ரேஷன் அரிசியை லாரியில் கடத்தி செல்வதும் அந்த விசாரணையில் தெரியவந்தது. சோதனையில் 23 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி மற்றும் அதை கடத்திய லாரியையும் சிறுபாக்கம் சப்-இன்ஸ்பெக்டர் ஜம்புலிங்கம் தலைமையிலான போலீசார் பறிமுதல் செய்து, அரிசி கடத்திய 5 பேரையும் மாவட்ட குடிமைப்பொருள் குற்ற புலனாய்வுத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)