ADVERTISEMENT

குட்கா, பான்மசாலா விவகாரம் - தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அரசு மேல்முறையீடு

05:45 PM Feb 08, 2023 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

குட்கா, பான் மசாலா, புகையிலை உள்ளிட்டவற்றை உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கொண்டு வந்து தடை செய்த உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்திருந்தது. இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.

கடந்த 2006 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட உணவு பாதுகாப்பு மற்றும் தரச் சட்டத்தின் கீழ் தமிழகத்தில் குட்கா, பான் மசாலா, சுவையூட்டப்பட்ட புகையிலை பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டது. தடையை மீறி சட்டவிரோதமாக செயல்படுபவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுத்து வந்தது. அரசின் இந்த உத்தரவு சிறு நிறுவனங்களுக்கு எதிராக இருப்பதாக குட்கா பொருட்களைத் தயாரிக்கும் நிறுவனங்கள் சார்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.சுப்பிரமணியன் தலைமையிலான அமர்வு கடந்த 25ஆம் தேதி உத்தரவு ஒன்றை பிறப்பித்தது.

உணவின் பாதுகாப்பு மற்றும் தரத்தை உறுதி செய்வதற்காக கொண்டுவரப்பட்ட உணவு பாதுகாப்பு தரச் சட்டத்தில் புகையிலை பொருட்களை பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. அப்படி இருக்கும் பொழுது உணவு பாதுகாப்புத் துறை சார்பாக விதிக்கப்பட்ட இந்த தடையானது சரியானது அல்ல. எனவே, தடையை நீக்குவதாகத் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், இதனை எதிர்த்து தற்போது தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. அந்த மேல்முறையீட்டு மனுவில் பான்மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்களால் தான் அதிக பாதிப்பு ஏற்படுகிறது. இதனை அடிப்படையாகக் கொண்டுதான் உணவு பாதுகாப்பு மற்றும் தரச் சட்டத்தில் தமிழ்நாடு அரசு தடை விதித்தது. ஆனால், அதனை கண்டுகொள்ளாமல் சென்னை உயர்நீதிமன்றம் இந்த தடையை ரத்து செய்துள்ளது. எனவே, உச்சநீதிமன்றம் இதில் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT