சீனாவில் வுஹான் மாகணத்தில் முதலில் பரவ ஆரம்பித்த கரோனா வைரஸ், இன்று 175 நாடுகளுக்கு மேல் பரவி உலக அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவிலும் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8252105286" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle ||
[]).push({});
இதில் தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில் உரிமம் இல்லாத அனைத்து குடிநீர் ஆலைகளை ஜூலை 31ம் தேதி வரை இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. அதுமட்டும் இல்லாமல் உற்பத்தி செய்யும் குடிநீரில் 15% தமிழக அரசுக்கு இலவசமாக வழங்க குடிநீர் ஆலைகளுக்கு நிபந்தனையும் அளித்துள்ளது.