ADVERTISEMENT

குஜராத்தை சேர்ந்த 29 பேருக்கு சென்னையில் கரோனா பரிசோதனை!

05:07 PM Apr 09, 2020 | santhoshb@nakk…

கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் இந்தியாவில் அதிகரித்து வருகிறது.

ADVERTISEMENT


குறிப்பாக, தமிழகத்தில் 738 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 21 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கரோனா பாதிப்பால் தமிழகத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், குஜராத்தை சேர்ந்த நபர் ஒருவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அகமதாபாத்தில் இருந்து சென்னைக்கு மத பிரச்சாரம் செய்ய வந்தவர் என்பதும், சென்னை பேசின் பிரிட்ஜ் பகுதியில் தங்கியிருந்ததும் காவல்துறையினர் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

ADVERTISEMENT



இதையடுத்து அந்த நபருடன் அகமதாபாத்தில் இருந்து சென்னைக்கு அவருடன் வந்த 29 பேருக்கும், புரசைவாக்கம், தேனாம்பேட்டை, சூளை, பெரியமேடு மசூதிகளில் பிரசங்கம் செய்தவர்களுக்கும், சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. குஜராத்தைச் சேர்ந்த 29 பேர் மற்றும் அரபு பாடகசாலை மேலாளர், பணியாளர்கள் என மொத்தம் 39 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது.

இதே மருத்துவமனையில் தப்லீக் ஜமாத் அமைப்பை சேர்ந்தவர்களுக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT