ADVERTISEMENT

கின்னஸ் சாதனை படைத்த ஒற்றைப் பல்...!

08:24 AM Feb 04, 2019 | bagathsingh

ADVERTISEMENT


புதுக்கோட்டையில் சமீப காலமாக நடக்கும் பல நிகழ்ச்சிகள் சாதனையாகி வருகிறது. கடந்த மாதம் அமைச்சர் விஜயபாஸ்கர் விராலிமலையில் நடத்திய ஜல்லிக்கட்டு உலக சாதனையானது. அடுத்து, புதுக்கோட்டையை சேர்ந்த பல் மருத்துவர் ராஜேஷ்கண்ணன் குழுவினர் தற்போது ஒற்றை பல் செய்து அதை கின்னஸ் சாதனையாக்கி உள்ளனர்.

ADVERTISEMENT


ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் புறப்பட்ட ராஜேஷ்கண்ணனுக்கு உதித்தது பல். தன்னுடன் ஒரு குழுவை இணைத்துக் கொண்டு உலக சாதனை முயற்சியாக 33.3 அடி உயரத்தில் செயற்கை பல் ஒன்றை வடிவமைத்தனர். இந்த பல்லை வடிவமைக்க ராஜேஷ்கண்ணன் குழுவினர் சுமார் இரண்டரை மாதம் எடுத்துக் கொண்டனர்.

சில முறை முக்கால்வாசி வேலைகள் முடிந்த நிலையில் உடைவதும் மறுபடி முதலில் இருந்து செய்வதுமாக இறுதியில் வெற்றி பெற்றுள்ளனர். இந்த புதிய பல் மாதிரியை வடிவமைத்த குழுவினர் புதுக்கோட்டை நகர் மன்றத்தில் அதனை காட்சிப்படுத்தினர்.


இந்த செயற்கை பல்லை ஆய்வு செய்த லண்டனை சேர்ந்த சுவப்னில் தலைமையிலான கின்னஸ் சாதனை குழுவினர் 33.3 அடி உயரமுள்ள இந்த செயற்கை பல்லை பார்த்து உலக சாதனையாக அறிவித்து கின்னஸ் சாதனை சான்றிதழை வழங்கினார்கள்.

இதற்கு முன் கடந்த 2015-ம் ஆண்டு நியூசிலாந்து நாட்டில் அமைக்கப்பட்டிருந்த 30 அடி உயரமுள்ள செயற்கை பல் உலக சாதனையாக இருந்தது.



கின்னஸ் சாதனை படைத்த ராஜேஷ்கண்ணன் குழுவினருக்கு அதற்கான சான்றிதழை கின்னஸ் சாதனை குழுவிலிருந்து வந்திருந்தோர் வழங்கினர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT