ADVERTISEMENT

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பணியாற்றிய மின்துறை, துப்புரவு பணியாளர்களுக்கு பரிசளிப்பு

05:36 PM Dec 14, 2018 | rajavel



கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் துப்புரவு பணிகளை சிறப்பாக மேற்க்கொண்ட அதிரை பேரூராட்சி துப்புரவு பணியாளர்களுக்கும், மின்துறை உழியர்களுக்கும் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் பரிசளிப்பு நிகழ்ச்சி அதிராம்பட்டினத்தில் நடைப்பெற்றது.

ADVERTISEMENT

இந்நிகழ்வுக்கு மாவட்ட பொறுப்புக்குழு தலைவர் அப்துல் சலாம் தலைமை தாங்கினார். இதில் பேசிய துணை பொதுச்செயலாளர் ராவுத்தர்ஷா அவர்கள் துப்புரவு பணியாளர்களின், கடும் உழைப்பை வெகுவாக பாராட்டினார்.

ADVERTISEMENT

அடுத்து பேசிய பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி எம்எல்ஏ, இந்த நிவாரண பணிகள் மூலமாக அதிரை சுற்று வட்டாரத்தில் அனைத்து மக்களின் அன்பை மஜக பெற்றிருக்கிறது என்றார்.

மேலும் அவர் பேசும்போது, நாம் ஆற்றி வரும் நிவாரண பணிகள் மனிதநேயத்தின் அடிப்படையில் ஆனவை. அரசியல் லாபத்திற்காக இதை செய்யவில்லை. ஏனெனில் இது போன்ற செயல்களுக்கு எல்லாம் ஒட்டு கிடைப்பதில்லை என்ற எதார்த்ததை நாங்கள் புரிந்து வைத்திருக்கிறோம். இறைவனின் அருள் கிடைப்பதற்காகவே இப்பணிகளை செய்கிறோம். இதில் ஒரு மன திருப்தி கிடைக்கிறது. அதனால் தான் இன்றுவரை அரசியல் கட்சிகளில் மஜக மட்டும் களத்தில் நிற்கிறது என்றார்.

நிறைவாக நூற்றுக்கும் மேற்ப்பட்ட மின் மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு 800 ரூபாய் மதிப்பு உள்ள பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் பங்கேற்ற பழனியம்மாள் என்ற துப்புரவு பெண்மனி கூறும்போது, எங்களையும் நினைத்து பார்த்து சிறப்பு செய்வதை வாழ்நாளில் மறக்க மாட்டோம் என நெகிழ்ச்சியுடன் கூறினார்.

இந்நிகழ்வில் மாநில விவசாய அணி செயலாளர் நாகை முபாரக், அதிரை பேரூராட்சி முன்னாள் தலைவர் அஸ்லம், நாகை தெற்கு மாவட்ட செயலாளர் பரகத் அலி, திருவாரூர் மாவட்ட செயலாளர் சீனி ஜெகபர், பஹ்ரன் மண்டல செயலாளர் வல்லம் ரியாஸ், ஜித்தா மாநகர செயலாளர் மஸ்தான், தலைமை செயற்குழு உறுப்பினர் ஷாஜகான் மற்றும் அதிரை மஜக நிர்வாகிகளும் கலந்துக் கொண்டனர்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT