ADVERTISEMENT

'எரிபொருள் பாட்டில் வீச்சு சம்பவம்... துடியலூரில் ஒருவர் கைது'- கோவை காவல் ஆணையர் பேட்டி

07:59 AM Sep 27, 2022 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

கடந்த 22 ஆம் தேதி இரவு வேளையில் கோவை பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தொடர்ந்து ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் இந்து முன்னணியினர் மற்றும் பாஜக நிர்வாகிகள் சிலரின் கார், வீடு, வர்த்தக நிறுவனங்கள் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவங்கள் குறித்த செய்திகள் தொடர்ந்து வெளியாகி வந்தன.

இந்த சம்பவங்களுக்கு எதிராக கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த கோவை காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் பேசுகையில், ''கடந்த 22 ஆம் தேதி இரவு சுமார் 8:30 மணி அளவில் கோவை பாஜக அலுவலகத்தில் நடந்த எரிபொருள் பாட்டில் வீச்சு தொடர்பான வழக்கில் காவல்துறை இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்திருந்தது. இதுதொடர்பாக மூன்று தனிப்படைகள் அமைத்து புலன் விசாரணை செய்து வந்தோம். நூற்றுக்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் தொழில்நுட்ப அடிப்படையில் செய்த புலன் விசாரணை, சாட்சிகளை விசாரித்தது இவற்றின் அடிப்படையில் இன்று சதாம் உசேன் என்ற நபரை துடியலூர் பகுதியிலிருந்து கைது செய்துள்ளோம்.

இந்த வழக்கில் தேடப்படும் இன்னொருவர் தலைமறைவாக இருக்கிறார். அவரை தேடி வருகிறோம். சதாம் உசேனிடம் மட்டும் விசாரணை நடைபெற்று வருகிறது. எப்படி திட்டமிட்டு இதை செய்தார்கள், இதில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்பது தொடர்பாக புலன் விசாரணை நடைபெற்று வருகிறது. இன்னொருவர் தலைமறைவாக இருப்பதால் அவரது பெயரை வெளியிட முடியாது'' என்றார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT