கோவை சி.எம்.சி காலனியை சேர்ந்த பிளம்பர் தொழில் செய்து வருபவர் ஜோதி(33) . இவர் ஈ.எஸ்.ஐ. மருத்துவமனையில் சுகாதார பணியில் ஈடுபட்டிருந்த 32 வயதான பெண்ணிடம் பாலியல் ரீதியாக நடந்து கொண்டிருக்கிறார்.

Advertisment

kovai BJP person arrested

பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான அந்தப் பெண் ஜோதியிடம் இருந்து ரத்தக் காயங்களோடு தப்பி வந்து சிங்காநல்லூர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தார்.

புகாரைப் பெற்றுக் கொண்டு விசாரணை செய்த பின்னர்..பெண்ணை அவமானம் செய்தல், அறிந்தே காயம் ஏற்படுத்துதல், தமிழ்நாடு பெண்கள் துன்புறுத்தல் தடுப்பு சட்டம் உட்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஜோதியை சிங்காநல்லூர் காவல்துறையினர் கைது செய்தனர். ஜோதி பாஜகவின்எஸ்.சி,எஸ்.டி பிரிவில் முக்கிய பொறுப்பில் உள்ளார்.