கோவையில் இந்து முன்னணி பிரமுகர் ஆனந்தன் தாக்கப்பட்ட சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி கடையடைப்பு நடத்தப்பட்டு ஒரு பதட்டச் சூழல் உருவானது. அந்த பதற்றம் தணிவதற்குள்.

Advertisment

 BJP person Auto Damage...

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

கோவையில், குனியமுத்தூர் கங்காநகர் பகுதியைச்சேர்ந்த கார்த்தி, என்பவர்பாரதிய ஜனதா கட்சியின் அமைப்புச்சாரா தொழிற்சங்கத்தில் ஆட்டோ ஓட்டுனர் சங்கத்தின் துணைத் தலைவராக உள்ளார்.

இவர் நேற்று இரவு வேலை முடிந்து தனது ஆட்டோவை வீட்டின் முன் நிறுத்தியுள்ளார். இந்த நிலையில் அடையாளம் தெரியாத நபர்கள் கார்த்தியின் ஆட்டோவின் கண்ணாடிகள் உடைத்து,இருக்கை மற்றும் ஆட்டோவின் மற்ற இடங்களில் குத்திக் கிழித்துச் சென்றுள்ளார்கள்.

Advertisment

 BJP person Auto Damage...

இந்தச் சம்பவம் அதிகாலையில் நடந்துள்ளதால் யார் செய்தார்கள் என்ற விபரம் தெரியவில்லை என சொல்லும் குனியமுத்தூர் போலீசார், அருகில்உள்ள சி.சி.டி.விகேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.