ADVERTISEMENT

ஊர்க்காவல்படைக்கு சங்கம் அமைப்பது தண்டனைக்குரிய குற்றம்! -உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்!

05:26 PM Sep 01, 2020 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஊர்க்காவல்படைக்கு சங்கம் அமைப்பது தண்டனைக்குரிய குற்றம் எனத் தமிழக அரசு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊர்க்காவல்படையைச் சேர்ந்த நாகேந்திரன் என்பவர் சங்கம் தொடங்கியதையடுத்து, அவருக்கு எதிராக துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதனை எதிர்த்து நாகேந்திரன், சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், உள்துறை கூடுதல் செயலர் சார்பாக, சென்னை மாநகர துணை ஆணையர் பெரோஸ்கான் சார்பில் பதில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

அதில், ஊர்க்காவல்படை என்பது சட்டபூர்வ அதிகாரம் இல்லாத ஓர் தன்னார்வ அமைப்பாகும். தேவையைப் பொறுத்து அவர்கள் பணிக்கு அழைக்கப்படுகின்றனர். அவர்களுக்கு நாளொன்றுக்கு 560 ரூபாய் ஊதியமாக வழங்கப்படுகிறது.

காவல்துறைக்கே சங்கம் வைக்க சட்டப்பூர்வமான அனுமதியில்லை என்கிறபோது, காவல்துறைப் பணிகளை மேற்கொள்ளும் ஊரக்காவல்படைக்கும் சங்கம் வைக்க அனுமதியில்லை. எனவே, அரசின் அனுமதியின்றி சங்கம் அமைப்பது தண்டனைக்குரிய குற்றம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவல்துறையின் மனுவுக்கு பதிலளிக்க மனுதாரர் தரப்பில் அவகாசம் கோரியதையடுத்து, வழக்கு விசாரணை வரும் செப்டம்பர் 7-ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT