ADVERTISEMENT

ரேஷன் கடையில் புகுந்த வெள்ள நீர்! பாழான 7 டன் அரிசி! 

01:17 PM Nov 26, 2021 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

திண்டுக்கல்லில் நேற்று (25.11.2021) மதியம் முதல் இரவு வரை தொடர்ந்து 6 மணி நேரம் கனமழை பெய்தது. இதில் சுமார் 10 சென்டி மீட்டருக்கு மேலாக மழை பெய்ததால், திண்டுக்கல் மாநகரில் உள்ள பல பகுதிகளில் வீடுகளும் கடைகளும் தண்ணீரில் மூழ்கின.

இந்தத் தொடர் மழையின் காரணமாக திண்டுக்கல், பாலகிருஷ்ணாபுரத்தில் உள்ள பாண்டியன் நகர் கூட்டுறவு பண்டகசாலை நியாய விலைக் கடையில் வெள்ள நீர் புகுந்தது. இதனால், பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட இருந்த அரிசி 100 சிற்பம், பச்சரிசி இருபத்து எட்டு சிற்பம், பருப்பு 300 கிலோ, கோதுமை 550 கிலோ ஆகியவை மழைநீரில் மூழ்கி சேதமாயின.

மழை நீரில் நனையாத சில மூடைகளை மினி வேன் மூலம் மாற்று இடத்திற்கு எடுத்துச் சென்றனர். மேலும், கடையில் தேங்கி நிற்கும் தண்ணீரை ஊழியர்கள் வாரி இறைத்துக்கொண்டிருக்கின்றனர். ரேஷன் பொருட்கள் மழையில் நனைந்து வீணாவதை அப்பகுதி மக்கள் சோகத்துடன் வந்து பார்த்துவிட்டுச் சென்றனர். திண்டுக்கல்லில் மழை தொடர்ந்து பெய்துகொண்டே இருக்கிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT