ADVERTISEMENT

கிராமப்புறத்தில் முதல்முறையாக டிஜிட்டல் நூலகம்.. எப்படி இருந்த நூலகம் இப்படி ஆயிருக்கு!!

04:23 PM Aug 02, 2021 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

செல்போன்களின் வருகைக்குப் பிறகு நூலகங்களில் இருந்து புத்தகங்களை எடுத்துப் படிக்கும் பழக்கம் இன்றைய தலைமுறையினரிடம் குறைந்திருக்கிறது. ஆனால், இளைஞர்களின் புத்தகத் தேடல் குறையவில்லை. எந்த புத்தகம் வேண்டுமானாலும் செல்போன்களிலேயே தேடிப்படிக்கின்றனர். அதேநேரம், கிராமங்கள் தோறும் நூலகங்கள் அமைக்கப்பட்டிருந்தாலும், அவை சரியான பராமரிப்புகள் இன்றி உள்ளன.

இந்த நிலையில் தான், புதுக்கோட்டை மாவட்டத்தின் கடைக்கோடி கிராமம் ஏம்பல் எனும் பகுதியிலும் ஒரு பழைய கட்டிடத்தில் சுமார் 15 ஆயிரம் புத்தகங்களுடன் ஒரு நூலகம் இயங்கி வந்தது. இந்த நூலகத்தைத் தரம் உயர்த்தி இளைஞர்களையும் ஈர்க்க வேண்டும் என்பதற்காக ஆர்வமுள்ள கிராம இளைஞர்கள், அப்பகுதி பள்ளியின் முன்னாள் மாணவர்கள் இணைந்து நூலகத்திற்காக ஒரு தனி கட்டிடம் வேண்டும் என்று போராடி ஒரு கட்டிடம் வாங்கினார்கள்.

அதன் பிறகு கிராமப்புற நூலகத்தை மின் நூலகமாக மாற்றும் முயற்சியில் இறங்கினர். அதற்கு கணினி வேண்டும் என்ற நிலையில், தன்னார்வமாக பேரின்பநாதன் ஒரு கணினி வழங்கியதோடு, அரசிடம் கணினிகள் கேட்டார். பல ஐடி நிறுவனங்கள் தாங்கள் பயன்படுத்திய பல கணினிகளை நூலகங்களுக்காக அரசிடம் வழங்கியது. ஒவ்வொரு நூலகத்திற்கும் தலா 2 கணினிகள் வழங்கிய நிலையில் ஏம்பல் கிராமத்தினரின் ஆர்வத்தைப் பார்த்து 3 கணினிகள் வழங்கினார்கள். மற்ற பல கிராமங்களில் கணினிகள் வாங்கிய நிலையிலேயே இருக்கும் சூழலில், ஏம்பல் கிராமத்தினர் மட்டும் வேகமாக ஒயரிங் முதல் இணைய வசதி வரை சொந்த செலவில் செய்து தமிழகத்திலேயே முதல் முறையாக கிராமப்புற டிஜிட்டல் நூலகத்தைத் திறந்து 4 கணினிகளில் புத்தகங்களைப் படிக்கும் வகையில் நூலகத்தை அமைத்துள்ளனர்.

இதேபோல ஒவ்வொரு கிராமப்புற நூலகத்திலும் உள்ள கணினிகளை டிஜிட்டல் நூலகத்திற்குப் பயன்படுத்தினால் போட்டித் தேர்வுகளுக்காக புத்தகம் தேடும் இளைஞர்களுக்கு வசதியாக இருக்கும் என்பது மக்களின் எண்ணமாக இருக்கிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT