/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th_1162.jpg)
சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த இளைஞருக்கு 6 ஆண்டு சிறை. சிறுமி குடும்பத்திற்கு ரூ. 2 லட்சம் அரசு இழப்பீடு வழங்க நீதிபதி உத்தரவு.
புதுக்கோடடை மாவட்டம், பொன்னமராவதி பகுதியைச் சேர்ந்த வெள்ளைச்சாமி மகன் உதயச்சந்திரன் (30),கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் 17ஆம்தேதி தனது பக்கத்து வீட்டில் தனிமையில் இருந்த 9 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறுமியின் தாயார் கொடுத்த புகாரின் பேரில் பொன்னமராவதி போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கு புதுக்கோட்டை நீதிமன்றத்தில் நடந்துகொண்டிருந்தது. இந்த நிலையில், இன்று (29.06.2021) வழக்கு விசாரனை முடிந்து நீதிபதி சத்யா தீர்ப்பு கூறியுள்ளார். அதில், சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததற்காக 6 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும்ரூ. 50 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ. 2 லட்சம் இழப்பீடாக அரசு வழங்கவும் உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு வழக்கறிஞர் அங்கவி ஆஜரானார். புலன் விசாரனையை சரியாக செய்து குற்றவாளிக்குத் தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுத்த இன்ஸ்பெக்டர் கருணாகரன் உள்ளிட்ட போலீசாரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்திபன் பாராட்டினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)