ADVERTISEMENT

மாவட்ட செயலாளருடன் வாக்கு சேகரிப்புக்கு கிளம்பிய பெண் வேட்பாளர்!

11:52 AM Mar 09, 2019 | Anonymous (not verified)

அமமுக கட்சியை சேர்ந்த துணை பொதுசெயலாளர் தினகரன் யாருடனுடன் கூட்டணி கிடையாது. எங்களிடம் வேட்பாளர்கள் பட்டியல் தயாராக இருக்கிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் எங்களுடைய வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்று சொல்லியிருந்தார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

பெரிய கட்சிகளின் தலைமை தற்போது இட ஒதுக்கீடு, சீட்டு ஒதுக்கீடு என்கிற விசயத்தில் மும்மரமாக இருக்கும் போது அமமுக தினகரன் மட்டும் 2 மாதங்களுக்கு முன்பே தமிழக முழுவதும் திறந்தவெளியில் பிரச்சாரத்தை ஆரம்பித்து கிட்டதட்ட சட்டமன்ற தொகுதிக்கு 120 தொகுதிக்கு மேல் பிரச்சாரத்தை முடித்து விட்டார். இவருடைய பாணியையே அவருடைய வேட்பாளர்களும் அவர்களுடைய பெயர் வெளிடாமல் இருந்தாலும் வாக்கு சேகரிக்கும் வேலையில் முழுமூச்சாக இயங்கி கொண்டிருக்கிறார்கள்.

திருச்சி எம்.பிக்கு அமமுக சார்பில் விருப்ப மனு பலரிடம் வாங்கியிருந்தாலும் ஏற்கனவே காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்த முன்னாள் மேயர் சாருபால தொண்டைமான் கட்சியில் அமைப்பு செயலாளராக இருக்கிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு மேற்கு தொகுதிக்கு உட்பட்ட வட்ட செயலாளர்களை தன்னுடைய அரண்மனைக்கு வரவழைத்து தலைக்கு 2000 கொடுத்து பூத் கமிட்டிக்கு கொடுங்கள் என்று உற்சாகப்படுத்தினார்.

திருச்சி மாநகரர் பகுதியில் மா.செ.வாக இருக்கும் ஜெ.சீனிவாசன் தனக்கு கீழ் உள்ள திருச்சி கிழக்கு, திருவரம்பூர், மேற்கு ஆகிய தொகுதியில் உள்ள கட்சியின் முக்கிய நிர்வாகிகளை சந்தித்து சால்வை போட்டும், சிறப்பு பரிசுகள் வழங்கியும் தன்னுடைய தேர்தல் வேலைக்கான அச்சாரத்தை போட்டு கட்சியினர் இடையே பெரிய உற்சாகத்தையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தி வருகிறார்.

கடந்த 2 தேர்தலில் ஏற்பட்ட அனுபவத்தை வைத்து இந்த முறை அத்தனை தவறுகளையும் சரி செய்து வெற்றிபெற வேண்டும் என்கிற வேகத்தில் தேர்தல் சூட்டை ஆரம்பித்து வைத்துவிட்டார் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT