Skip to main content

காலிப் பரிசுப் பெட்டி:கலையும் தலைகள்!

Published on 05/06/2019 | Edited on 05/06/2019

ஜெ.வின் மறைவுக்குப் பின் அ.தி.மு.க.வில் ஏற்பட்ட உட்சபட்ச குழப்பம் காரணமாக, அதிருப்தியாளர்களை ஒருங்கிணைத்து டி.டி.வி தினகரன் உருவாக்கியது தான் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்கிற அ.ம.மு.க. சசிகலா, ஜெ.வுடனிருந்ததால் அவர் சார்ந்த தேவர் சமூகத்தினர் அ.தி.மு.க.வின் வாக்கு வங்கியில் முக்கியமானார்கள். நேரம். சசிகலா சிறைவாசம் போக தினகரன் அ.ம.மு.க. ஆரம்பித்ததால் சமூகம் காரணமாக அவர் பக்கம் ஆதரவாகத் திரண்டனர் தேவர் சமூகத்தவர்கள். குறிப்பாக தினகரன் தென்மாவட்டம்  வருகிறபோது அவர் சார்ந்த சமூகத்தினர் திரண்டு வந்து வரவேற்றது அ.ம.மு.க. விற்கு நல்லதொரு மாஸை ஏற்படுத்தியதற்கு மற்றதொரு காரணமும் பேசப்பட்டது.

 

 Empty gift box

 

அ.தி.மு.க.வின் எக்ஸ்.எம்.எல்.ஏ.க்களான ஆர்.பி.ஆதித்தன், அண்ணாமலை, இசக்கிசுப்பையா, மைக்கேல் ராயப்பன் இவர்களோடு அ.தி.மு.க.வின் பொறுப்பாளர்களான பாப்புலர் முத்தையா கல்லூர் வேலாயுதம் பாளை பகுதி செ.க்களான அசன் ஜாபர் அலி, எம்.சி.ராஜன் மற்றும் அ.தி.மு.க.வினர்  பெரிய லெவலில் சாய்ந்தது தான். அது, அ.ம.மு.க.வின் பலம் பற்றிய பிம்பத்தை ஏற்படுத்தியதால் முக்கிய கட்சிகளுக்கு சவாலாகவுமிருந்தது. 

 

 Empty gift box!

 

அ.ம.மு.க.வில் அமைப்பு ரீதியாக கிளைக்கழகங்கள் ஏற்படுத்தப்பட்டன. குறிப்பாக தென்மண்டல அமைப்பாளரானார் அ.தி.மு.க.வின் மாஜி முக்கிய புள்ளியான மாணிக்கராஜா. தேர்தல் நெருங்க பிற சமூகத்தின் ஆதரவாளர்களும் இணைந்தனர். இதனால் எம்.எல்.ஏ, எம்.பி. கனவு காரணமாக பலர் தங்களின் சொந்தப் பணத்தைக் கட்சி வளர்ச்சிக்காக காலி செய்தனர்.

 Empty gift box!

 

 Empty gift box!

 

நடந்து முடிந்த தேர்தலில் மக்களவைக்கு 37 தொகுதிக்கும், சட்டமன்ற இடைத்தேர்தலில் 22 வேட்பாளர்கள் என களத்தில் நின்றும் ஒருவர் கூடத் தேறவில்லை. பல இடங்களில் டெப்பாசிட்டும் பறிபோனது.

 

 Empty gift box!

 

எதிர்பார்ப்புகள் நடக்காத சூழலில் தேர்தல் முடிவுக்குப் பின்பு அ.ம.மு.க.வின் முக்கியப் புள்ளிகளான அண்ணாமலை, ஆர்.பி.ஆதித்தன் போன்றவர்கள் அ.தி.மு.க.விற்கு நடையைக்கட்டியது பலரது கவனத்தை ஈர்த்தது. அதைத் தொடர்ந்து அதிருப்தி காரணமாக நேற்று முன்தினம் அ.ம.மு.க.வின் மா.செ. பாப்புலர் முத்தையா, நெல்லை வேட்பாளர் மைக்கேல் ராயப்பன், அசன் ஜாபர் அலி, எம்.சி.ராஜன் மற்றும் பல நிர்வாகிகள் எடப்பாடி பழனிச்சாமியைச் சந்தித்து மீண்டும் அ.தி.மு.க.வில் இணைந்தனர். இது, கட்சி மட்டத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்த தி.மு.க பக்கமும் சாயும் முடிவிலுமிருக்கிறார்களாம்.

 

 Empty gift box!


 

 Empty gift box!

 

தினகரனை தொண்டர்கள், பொறுப்பாளர்கள் நெருங்கிவிடாதபடி தடையாய் நிற்கிறார் தென்மண்டல பொறுப்பாளர் மாணிக்கராஜா. அது தான் எங்களின் விலகலுக்குக் காரணம் என்கிறார்கள் மாறியவர்கள். இதனிடையே அ.ம.மு.க.வின் முக்கியப் புள்ளியான இசக்கி சுப்பையா தன்னுடைய குற்றாலம் ரிசார்ட்டில் நேற்றும், முன்தினமும் தனது ஆதரவாளர்கள் முன்னூறு பேர்களை வரவழைத்து ஆலோசனை நடத்தியிருக்கிறார். கட்சிக்கு ஆதரவாகச் செயல்படுவது என்ற முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரிவித்தனர் இதில் கலந்து கொண்ட சிலர்.

 



ஆனாலும் அ.ம.மு.க.வில் குழப்பங்கள் தீர்ந்தபாடில்லை.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'இபிஎஸ்சிற்கு பயந்துதான் சில முன்னாள் எம்.எல்.ஏக்கள் அப்படி செய்தார்கள்'-டி.டி.வி.தினகரன் ஓபன் டாக்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
NN

தமிழகத்தில் முதல் கட்ட மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்திருக்கும் நிலையில் வாக்கு எண்ணிக்கை ஜூன் நான்காம் தேதி நடைபெற இருக்கிறது. மற்ற மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கி வருகின்றன.

இந்தநிலையில் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அமமுகவின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தேனியில் போட்டியிட்ட நிலையில், அங்கு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ''1999 இல் நான் முதன்முதலாக தேர்தலில் நின்றேன். அப்போதெல்லாம் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் இல்லை. 2001 சட்டமன்றத் தேர்தலிலும் கிடையாது. உள்ளாட்சித் தேர்தலிலும் கிடையாது. பாராளுமன்றத் தேர்தலிலும் இல்லை. 2006 சட்டமன்றத் தேர்தலிலும் நான் இங்கு நின்றேன் அப்போதும் தேர்தலில் யாரும் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் கிடையாது. 2011 க்கு பிறகு ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் தமிழக முழுவதும் பரவி விட்டது.

ஆர்.கே.நகரில் போட்டியிட்ட போது கூட நான் ஓட்டுக்கெல்லாம் பணம் கொடுக்கவில்லை. என்னைச் சேர்ந்த சில முன்னாள் எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிசாமி ஓட்டுக்கு 6 ஆயிரம், 10 ஆயிரம் கொடுத்ததால் அதற்குப் பயந்து போய் பார்த்த இடத்தில் ஒரு பத்திருவது வீடுகளுக்கு டோக்கன் ஏதோ கொடுத்ததாக தகவல் வந்தது. ஆனால் அதை நான் நிறுத்தி விட்டேன். ஆனால் எல்லாரும் டோக்கன் கொடுத்தார் டோக்கன் கொடுத்தார் என்று சொல்கிறார்கள். இங்கே இந்தத் தேர்தலில் யார் டோக்கன் கொடுத்தார்கள் என்று உங்களுக்குத் தெரியும். நான் தேனியில் நிற்பதால் மட்டும் சொல்லவில்லை தேனி மக்களுக்கு என்னை நன்றாகத் தெரியும். ஏற்கெனவே நான் எம்பியாக இருந்த பொழுது மக்கள் கேட்டதெல்லாம் செய்திருக்கிறேன். ஊர் பொதுக் காரியத்திற்கு அரசாங்கத்தின் மூலம் எல்லாம் செய்ய முடியாது. நான் அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் என்னால் முடிந்த அளவுக்கு செய்துள்ளேன். அதேபோல் தனி நபர்களுக்கு உதவி செய்திருக்கிறேன். கட்சி ஜாதி வித்தியாசம் இல்லாமல் உதவி செய்திருக்கிறேன்''என்றார்.

Next Story

தேர்தலுக்கு பின் சென்னை திரும்பும் மக்கள்; திணறும் பரனூர்

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
People returning to Chennai after elections; The stifling Paranur toll plaza

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று முன்தினம் (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு நேற்று முன்தினம் வாக்குப்பதிவு நடைபெற்றது.

ஏற்கனவே சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு இலட்சக்கணக்கானோர் வாக்களிப்பதற்காக சென்றிருந்தனர். இதன் காரணமாக ரயில் நிலையங்கள் மற்றும் பேருந்து நிலையங்களில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டிருந்தது. தொடர்ந்து வெள்ளி, சனி, ஞாயிறு என மூன்று நாட்கள் விடுமுறை என்பதால் கூட்டநெரிசல் அதிகமாக காணப்பட்டது. இந்நிலையில் தற்போது மூன்று நாள் விடுமுறை முடிந்து சென்னைக்கு அதிகப்படியான மக்கள் திரும்புவதால் பல்வேறு இடங்களில் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சென்னை அடுத்துள்ள பரனூர் சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படுகிறது.