ADVERTISEMENT

ஃபாத்திமா லத்தீப் தற்கொலை விவகாரம்..! தமிழக சிறுபான்மை ஆணையத்திடம் மஜக மனு...

12:06 PM Nov 16, 2019 | santhoshkumar

சென்னை ஐஐடி கல்லூரியில் படித்து வந்த கேரள மாணவி ஃபாத்திமா லத்தீஃப் கடந்த சில தினங்களுக்கு முன்பு தற்கொலை செய்துகொண்டார். அவருடைய தற்கொலைக்கு மூன்று ஆசிரியர்கள்தான் காரணம் என தன்னுடைய மொபைலில் நோட்டும் செய்திருக்கிறார். இந்நிலையில் மஜத பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

அதில், “சென்னை ஐஐடி யில் பயின்ற மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை செய்த நிகழ்வு நாட்டையே உலுக்கியுள்ளது. தற்போது இது கொலையாக இருக்குமோ என்ற ஐயமும் வலுப்பெற்றிருக்கிறது.

இதுதொடர்பாக சம்மந்தப்பட்ட பேராசிரியர் மீது கொலை வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சி, இப்பிரச்சனையை தமிழக சிறுபான்மையினர் ஆணையத்திற்கு கொண்டு சென்றுள்ளது.

அதன் முதன்மை செயலாளர் திரு.சுரேஷ்குமார் IAS அவர்களிடம் மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA தலைமையில் பொருளாளர் ஹாரூண் ரசீது, துணைப் பொதுச் செயலாளர் N.A.தைமிய்யா ஆகியோர் இது தொடர்பாக மனு அளித்தனர். அப்போது சிறுபான்மை ஆணைய மாநில துணைத் தலைவர் ஜவஹர் அலி உடனிருந்தார்.

இதை விசாரிக்கும் அதிகாரிகள், குற்றம் சாட்டப்பட்டவர்கள் உட்பட அனைவரையும் நேரில் அழைத்து விசாரிக்கும் வலிமை இந்த ஆணையத்திற்கு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது. ஃபாத்திமா லத்தீபுக்கு நீதி தேடும் அறப்போராட்டத்தில் இது ஒரு முக்கிய அம்சமாகும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT