ADVERTISEMENT

உருவாகியது தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதி!

07:58 PM Dec 02, 2021 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழ்நாட்டில் கடந்த ஒரு மாதமாக வடகிழக்கு பருவமழை பெய்துவருகிறது. இந்தப் பருவமழையால் பல்வேறு இடங்களிலும் தண்ணீர் அதிகமாகத் தேங்கியது. தமிழகத்தில் பெரும்பாலான நீர் நிலைகளும் நிரம்பி ஓடும் சூழல் ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் தரைப்பாலங்கள் துண்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வரும் 4 ஆம் தேதி முதல் தமிழகத்தில் மழை நீடிக்கும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

இந்நிலையில் அந்தமானில் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி தற்பொழுது தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறியுள்ளது. தற்பொழுது உருவாகியுள்ள தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது அடுத்த 12 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என அறிவித்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், இது தாழ்வு மண்டலமான பின்னர் 24 மணிநேரத்தில் 'ஜாவத்' புயலாக மாறும் எனத் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT