Skip to main content

டெல்லியில் பிரதமர் மோடியுடன் ஈபிஎஸ் - ஓபிஎஸ் இன்று சந்திப்பு!

Published on 26/07/2021 | Edited on 26/07/2021
hh


அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் நேற்று (25.07.2021) மதியம் விமானம் மூலம் திடீர் பயணமாக டெல்லி சென்றுள்ள நிலையில், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை இன்று சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்நிலையில், ஓபிஎஸ்-ஐ தொடர்ந்து அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி பழனிசாமியும் நேற்று இரவு டெல்லி சென்றார். இருவரும் தனித்தனியாக டெல்லி சென்றுள்ள நிலையில், இன்று காலை 11 மணி அளவில் பிரதமரின் அலுவலகத்தில் இவர்கள் இருவரும் பிரதமரைச் சந்தித்துப் பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தச் சந்திப்பில் தமிழ்நாடு அரசியல், சசிகலா வருகை ஆகியவை பற்றி பேச வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.

 

 

சார்ந்த செய்திகள்