ADVERTISEMENT

" பான் கார்டு " இணையதளம் மூலம் எளிதாக விண்ணப்பிக்கலாம் !

09:57 AM Mar 14, 2019 | Anonymous (not verified)

இந்தியாவில் அனைத்து மாநில மக்களும் வங்கி கணக்கை (Account Opening) தொடங்க வேண்டுமானால் பான் கார்டு (PAN CARD) முக்கியமானது. இணைய தள முகவரி :
https://www.onlineservices.nsdl.com/paam/endUserRegisterContact.html. பான் கார்டு விண்ணப்பித்தவுடன் பான் கார்டு நிலையை அறிய இணையதள முகவரி : https://tin.tin.nsdl.com/pantan/StatusTrack.html .

ADVERTISEMENT

" பான் கார்டு " விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள் !
1. விண்ணப்பதாரரின் புகைப்படம் (Passport Size Photo).
2.ஆதார் அட்டை கட்டாயம். ( இதில் உள்ள விவரங்கள் பான் கார்டில் இடம் பெறும்)
3.ஆதார் அட்டையில் மொபைல் எண் இணைத்திருக்க வேண்டும். ஏனெனில் பான் கார்டு விண்ணப்பிக்கும் போது "ஆதார்அட்டை " Verification Code "OTP" பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு வரும். இதனை குறிப்பிட்டால் மட்டுமே பான் கார்டு விண்ணப்பம் இறுதி வடிவம் பெறும். பின்பு பான் கார்டு "Acknowledgement No" பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

ADVERTISEMENT

பான் கார்டு இருந்தால் மட்டுமே வங்கிகளில் புதிய கணக்கை தொடங்க முடியும் என ரிசர்வ் வங்கி ஏற்கெனவே அறிவித்துள்ளது. இதன் படி வரி ஏய்ப்பு செய்பவர்கள் எண்ணிக்கை குறையும். மேலும் ஒவ்வொருவரின் சராசரி ஆண்டு வரவு செலவு கணக்கை வருமான வரித்துறை ஆராய எளிதாக இருக்கும். ஒருவருக்கு ஒரு பான் எண் மட்டுமே மத்திய வருமான வரித்துறையால் வழங்கப்படுகிறது. ஒன்றுக்கு மேற்பட்ட பான் கார்டு வைத்திருந்தால் இது சட்டப்படி குற்றமாகும். இதை வருமான வரித்துறையால் கண்டறியப்பட்டால் "Provisions of section" 272B of the Income tax Act 1961 படி ரூபாய் 10000 அபராதம் வசூலிக்கப்படும். பான் கார்டு விண்ணப்பிக்க அரசுக்கு செலுத்த வேண்டிய கட்டணம் ரூபாய் 110 மட்டுமே.

இந்த இணையதளத்தை பயன்படுத்தி பான் கார்டில் பெயர் , பிறந்த தேதி உள்ளிட்டவற்றை திருத்தம் மேற்கொள்ளலாம். மேலும் விண்ணப்பித்த பான் கார்டு ஒரு மாதத்திற்குள் கூரியர் மூலம் வீட்டிற்கு வந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.


பி.சந்தோஷ் , சேலம்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT