Skip to main content

சாதி சான்றிதழை விண்ணப்பிப்பது , பெறுவது எப்படி ?

Published on 12/03/2019 | Edited on 12/03/2019

தமிழக அரசு சாதி சான்றிதழை மக்கள் எளிதாக பெறும் வகையில் "இ-சேவை" (TN Government e-Service) மையத்தை ஒவ்வொரு மாவட்டத்திலும் தொடங்கியுள்ளது. இந்த மையங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் , தாசில்தார் அலுவலகங்கள் , மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு முக்கிய பகுதிகளிலும் தமிழக அரசின் "இ-சேவை மையங்கள்" தொடர்ந்து இயங்கி வருகின்றனர். இந்த இ-சேவை மையத்தை அணுகி மக்கள் எளிதாக "சாதி சான்றிதழ்" பெற்றுக்கொள்ளலாம்.

caste certificate


சாதி சான்றிதழ் விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள் !  
1.தந்தை அல்லது தாயின் சாதி சான்றிதழ். பெற்றோர்களிடம் சாதி சான்றிதழ் இல்லையெனில் கிராம நிர்வாக அலுவலரை சந்தித்து  குழந்தையின் பெயரையும் ,  அவர்களின் சாதி பெயரை குறிப்பிட்டு கிராம நிர்வாக அலுவலர் தரும் சான்றிதழை இ சேவை மையத்தில் கொடுக்க வேண்டும்.
2. குழந்தையின் ஆதார் அட்டை .
3. தந்தை மற்றும் தாய் ஆதார் அட்டை
4.நிரந்தர முகவரி அடையாள அட்டை.
5.குழந்தையின் பிறப்பு சான்றிதழ் .
6.குடும்ப அட்டை.

இவை அனைத்தும் "SCAN" செய்து பதிவேற்றம் செய்யப்படும். எனவே சாதி சான்றிதழ்க்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அனைத்து அசல்  ஆவணங்களையும் இ - சேவை மையத்திற்கு கொண்டு சென்று விண்ணப்பிக்கலாம். 

இணைய தளம் மூலம் விண்ணப்பித்த பின்பு சமந்தப்பட்ட விண்ணப்பதாரருக்கு ஒரு குறுந்தகவல் வரும். அதில் சாதி சான்றிதழ் விண்ணப்பித்தற்கான "Acknowledgement No" இடம் பெறும். மேலும் இ- சேவை மையத்தின் அலுவலர் விண்ணப்பித்தற்கான "Acknowledgement Receipt"யை சமந்தப்பட்ட விண்ணப்பத்தாரருக்கு வழங்குவர். பின்பு விண்ணப்பித்த சான்றிதழின் நிலையை அறிய "155250" என்ற எண்ணுக்கு "Acknowledgement No "யை டைப் செய்து குறுந்தகவல் அனுப்ப வேண்டும். இந்த குறுந்தகவல் ஒரு முறை அனுப்பினால் எவ்வித கட்டணமும் இல்லை. ஒரு முறைக்கு மேல் அனுப்பும் ஒவ்வொரு குறுந்தகவலுக்கும் ரூபாய் 1யை கட்டணமாக தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு நாம் வழங்க வேண்டும்.
குறிப்பு : இணையதளத்தில் விண்ணப்பித்து தமிழக அரசால் வழங்கப்படும் "சாதி சான்றிதழே" அனைத்து அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் செல்லும் என தமிழக அரசு உத்தரவிட்டது என்பது அனைவரும் அறிந்தது. சாதி சான்றிதழை விண்ணப்பிக்க கட்டணமாக ரூபாய் 60யை தமிழக அரசுக்கு இ-சேவை மையம் மூலம் மக்கள் செலுத்த வேண்டும்.

 

OBC சான்றிதழ் பெற தேவையான ஆவணங்கள் !

1.ஓபிசி சான்றிதழ் பெற விண்ணப்பத்தாரரின் அசல் சாதி சான்றிதழ் வேண்டும்.
2.பள்ளி மாற்று சான்றிதழ் வேண்டும்.
3.ஆதார் அட்டை (அல்லது) ஓட்டுநர் உரிமம்.
4.வாக்காளர் அடையாள அட்டை.
5.குடும்ப அட்டை .

இதையும் இ-சேவை மையத்திற்கு சென்று (OBC) சான்றிதழை விண்ணப்பித்து சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம். இதற்கு கட்டணமாக ரூபாய் 60 யை இ-சேவை மையம் மூலம் தமிழக அரசுக்கு கட்டணத்தை செலுத்தலாம். எந்த சேவை மையத்தில் விண்ணப்பிக்குறோமோ அங்கேயே சென்று சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளலாம். "அரசு சமந்தப்பட்ட சான்றிதழ்கள் அனைத்தும் "இ-சேவை" மையங்கள் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும். எனவே அனைத்து சான்றிதழ்களும் கனிணி மையமாக்கப்பட்டுள்ளது". மேலும் இந்த சான்றிதழ் கீழே "QR CODE" இடம் பெறும் இதை "SCAN" செய்து சேமித்து வைத்தால் போதும் எப்போது வேண்டுமானாலும் சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

ஒவ்வொரு குழந்தைக்களையும் பள்ளியில் சேர்க்கும் போதும் மற்றும் அரசின் சலுகைகளைப் பெறும் போதும் "சாதி சான்றிதழ்" தேவை அவசியமாகிறது. மேலும் மாநில அரசுக்கு சாதி சான்றிதழ் போதுமானது. ஆனால் மத்திய அரசு தேர்வுக்கு விண்ணப்பிக்கும் போது (OBC) சான்றிதழ் அவசியம் தேவை எனவே இந்த சான்றிதழையும் பெற்று கொண்டால் மிகச்சிறப்பாகவும்  , தேவைப்படும் இடத்தில் பயன்படுத்திக்கொள்ளலாம் என்பது எவராலும் மறுக்க முடியாத உண்மை.



 பி . சந்தோஷ் , சேலம் .

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘கிரிக்கெட் ரசிகர்கள் கவனத்திற்கு’ - ஐ.பி.எல். நிர்வாகம் முக்கிய தகவல்! 

Published on 11/03/2024 | Edited on 11/03/2024
Attention Cricket Fans - IPL Administration is key information

உலக அளவில் புகழ்பெற்ற கிரிக்கெட் தொடரான ஐ.பி.எல். டி20 தொடர் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இதன் 17 ஆவது சீசன் இந்த ஆண்டு (2024) மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். தொடருக்கான முதற்கட்ட அட்டவணை வெளியிடப்பட்டது. அதன்படி மார்ச் 22 ஆம் தேதி ஐ.பி.எல். தொடர் தொடங்கவுள்ளது. ஏப்ரல் 7 ஆம் தேதி வரை 21 போட்டிகள் முதற்கட்டமாக நடைபெறவுள்ளன.

அந்த வகையில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மார்ச் 22இல் நடைபெறும் ஐ.பி.எல். தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை அணி - பெங்களூரு அணியுடன் மோதுகிறது. 9வது முறையாக ஐ.பி.எல். சீசனின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்குகிறது. மேலும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் அட்டவணை வெளியான பிறகு 2 ஆம் கட்ட அட்டவணை வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

அதே சமயம் கடந்த ஆண்டு நேரடியாக டிக்கெட் வாங்கி கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு விற்கப்படுவதாக புகார் எழுந்திருந்தது. இந்நிலையில், இந்த புகார்களை தடுக்கும் வகையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாட உள்ள போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை ஆன்லைனில் மட்டுமே நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. டிக்கெட் விற்பனை குறித்த தேதி பின்னர் அறிவிக்கப்படும் என ஐபிஎல் நிர்வாகம் தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு ஆன்லைனில் முன்பதிவு! 

Published on 24/12/2023 | Edited on 24/12/2023
Online Booking for Jallikattu Tournaments

ஜனவரி மாதம் பொங்கல் வரவிருக்கும் நிலையில், மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. மதுரையில் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஆகிய இடங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலக அளவில் புகழ்பெற்றவை ஆகும்.

இந்நிலையில் வரும் ஜனவரியில் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவது குறித்து மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு ஆட்சியர் சங்கீதா தலைமை தாங்கினார். இந்தக் கூட்டத்தில் ஜல்லிக்கட்டு மாட்டின் உரிமையாளர்கள், மாடு பிடி வீரர்கள், அரசு அலுவலர்கள் என பலரும் கலந்து கொண்டனர். இதனையடுத்து ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்துகொள்வதற்கான முன்பதிவு ஆன்லைனில் நடைபெறும் எனவும்,  போட்டிகள் வழக்கமாக நடைபெறும் இடங்களில் நடைபெறும் எனவும் இந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.