ADVERTISEMENT

இயக்குநர் கே.பாக்யராஜ் கஞ்சா பழக்கத்திலிருந்து மீண்ட கதை!

10:15 AM Aug 24, 2019 | Anonymous (not verified)

ADVERTISEMENT

தமிழ் திரையுலகில் திரைக்கதை மன்னன் என்று இன்றளவும் புகழப்படுபவர் இயக்குநர் கே.பாக்யராஜ். இவர், சிகரெட் பழக்கத்தை நிறுத்திவிட்டார் என்பது பலருக்கும் தெரியும். ஆனால், இவர் கஞ்சாவுக்கு அடிமையாக இருந்து அதிலிருந்து மீண்ட கதை தெரியுமா?

ADVERTISEMENT

அதை அவரே ‘கோலா’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கூறினார்.

இப்படத்தின் விழாவின் பேசிய ஸ்டண்ட் மாஸ்டர் ஜாகுவார் தங்கம், கஞ்சா அடிக்குறவங்கள நடுரோட்டில் வச்சு வெட்டணும் என்று பேசினார். இதை அடுத்து பேசிய பாக்யராஜ், ’’நானே நிறைய கஞ்சா அடிச்சிருக்கேன். கோயம்புத்தூரில் குட்டப்பார்க்கில் உட்கார்ந்துகொண்டு அடிச்சிருக்கேன். அந்த பழக்கம் எனக்கு எப்படி வந்தது என்றால்....என்னிடம் உதவியாளராக இருந்தவர் விஸ்வம். சினிமாவுக்கு வருவதற்கு முன்பு அவரை நான் என்னுடைய நாடகத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்திருந்தேன். அந்த சமயத்துல அவர் ராமநாதபுரத்தில் இருந்து கோயம்புத்தூருக்கு அடிக்கடி கேரம் போர்டு ஆட வருவார். கேரம்போர்டு ஆடும்போது சிகரெட் பிடிப்பார். அந்த சிகரெட்டின் முனை ஒரு மாதிரியாக இருப்பதை கண்டுபிடித்து, ’இது என்ன?’என்று கேட்டேன். சிகரெட்டின் உள்ளே கஞ்சா துகள் வைத்திருப்பதை சொன்னார். கஞ்சா துகளை சிகரெட் உள்ளே திணித்து வைப்பதற்காகவே அவர் ஒரு உதவியாளரை வைத்திருந்தார்.

என்னிடம் ஒரு சிகரெட்டை நீட்டினார். ‘நான் சிகரெட் குடிப்பேன். ஆனால், இந்த சிகரெட்டை குடிப்பதற்கு பயமாக இருக்கிறது’ என்றேன். ’அந்த பயத்தை போக்குவதற்குத்தான் இது’ என்று கொடுத்தார். சரின்னு வாங்கி குடிச்சேன். அது ஒரு மாதிரியா நல்லாத்தான் இருந்துச்சு. அதன் பின்னர் கேரம் போர்டு ஆடும்போதெல்லாம் குடிப்போம். சில நேரங்களில் அது நல்லாவே வேலை செய்யும். நமக்கு இல்லாத ஐடியாக்கள் எல்லாம் அவற்றால் வரும்.

ஒருநாள் எல்லோரும் உட்கார்ந்து கஞ்சா அடித்துக்கொண்டிருக்கும்போது ஒருவன் சிரித்தான். ஏன் சிரிக்கிறோம் என்றே தெரியாமல் சிரிப்பான். ஒருத்தன் சிரித்தால் அடுத்தடுத்து எல்லோரும் சிரிப்போம். அப்போதுதான் சிந்தேன். நாம் போக நினைத்த பாதையை விட்டுவிட்டு தடம்மாறிப்போய்க்கொண்டிருக்கிறோம் என்பதை உணர்ந்தேன். அத்தோடு புறப்பட்டு சென்னை வந்துவிட்டேன். சினிமாவில் எனக்கு உதவியாளராக விஸ்வம் வந்தார். அப்போது அவர் கையில் சிகரெட் இருப்பதைபார்த்து, இத நான் விட்டதால்தான் நல்லா இருக்கிறேன். நீயும் விட்டுவிடு என்றேன்.

களவும் கற்றுமற என்பது மாதிரி சில விசயங்களை கற்றுக்கொண்டு விட்டுவிடவேண்டும். சிகரெட்டையும் நிறுத்தி 15 வருடங்களுக்க்கு மேல் ஆகிவிட்டது.’’என்று தெரிவித்தார்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT