Skip to main content

மண்ணின் மைந்தனாக இடைத்தேர்தலில் போட்டி... டைரக்டர் கவுதமன்

Published on 26/09/2019 | Edited on 26/09/2019

 

வரும் அக்டோபர் 21ஆம் தேதி விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி சட்டமன்றத் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதில் திமுக சார்பில் விக்கிரவாண்டியின் நா.புகழேந்தி போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாங்குநேரி தொகுதி கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு திமுக ஒதுக்கியுள்ளது. அதிமுக சார்பில் விக்கிரவாண்டியில் முத்தமிழ்ச்செல்வன், நாங்குநேரியில் வெ.நாராயணன் ஆகியோர் போட்டியிடுவதாக அதிமுக தலைமை அறிவித்துள்ளது.

 

director



இந்த நிலையில் திரைப்பட இயக்குநரும், தமிழ் பேரரசு கட்சியை நடத்தி வருபவருமான கவுதமன் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிட உள்ளதாக தெரிவித்துள்ளார்.
 

பத்திரிகைகளுக்கு அவர் அளித்த பேட்டியில், ஒருங்கிணைந்த தென்ஆற்காடு மாவட்டமாக இருந்தபோது, நானும் இந்த மண்ணின் மைந்தனாக இருந்துள்ளேன். அந்த வகையில் விக்கிரவாண்டி தொகுதியில் நான் போட்டியிடுகிறேன். இந்த தொகுதி மக்கள் என்னை வெற்றிப் பெற வைப்பார்கள். ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் பணத்தால் வென்றுவிடலாம் என்று நினைக்கிறார்கள். 
 

போர் வீரனாக இருந்தால் களத்தில் நிற்க வேண்டும். அப்போதுதான் வெற்றி தோல்வியை உணர முடியும். மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காகவே நான் விக்கிரவாண்டியில் போட்டியிடுகிறேன். வெள்ளிக்கிழமை வேட்பு மனுவை தாக்கல் செய்ய இருப்பதாக தெரிவித்தார். 


 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கண்ணீர் விட்டு அழுத பா.ரஞ்சித பட இயக்குநர்

Published on 07/03/2024 | Edited on 07/03/2024
pa.ranjith movie j.baby director suresh maari emotional at press meet

பா. ரஞ்சித்தின் 'நீலம் புரொடக்சன்ஸ்' தயாரிப்பில் அறிமுக இயக்குநர் சுரேஷ் மாரி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'J.பேபி'. இப்படத்தில் ஊர்வசி, அட்டகத்தி தினேஷ் மற்றும் லொள்ளு சபா மாறன் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு டோனி பிரிட்டோ என்பவர் இசையமைத்துள்ளார். 

இப்படத்தின் டீசர் கடந்த 2022 ஆம் ஆண்டு மே மாதம் வெளியானது. மேலும் 'நெடுமரம் தொலைந்ததே' என ஒரு பாடலின் லிரிக் வீடியோ அதற்கு முன்னதாக வெளியானது. இதையடுத்து நீண்ட இடைவெளிக்குப் பிறகு ட்ரைலர் சில தினங்களுக்கு முன்பு வெளியானது. இப்படம் மார்ச் 8 ஆம் தேதி ஆகிய நாளை யு சான்றிதழுடன் வெளியாகவுள்ளது. இதையொட்டி செய்தியாளர்கள் சந்திப்பு நடந்தது. 

இதனைத் தொடர்ந்து இப்படத்தின் சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. இதில் படக்குழுவினர் மற்றும் பத்திரிக்கையாளர்கள் கலந்து கொண்டனர். படம் முடிந்து பலரும் இயக்குநருக்கு பாராட்டு தெரிவிக்க அதனால் எமோஷனலான இயக்குநர் சுரேஷ் மாரி கண்ணீர் விட்டு அழுதார். பின்பு அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

Next Story

தனுஷை சந்தித்த சிதம்பரம்

Published on 29/02/2024 | Edited on 29/02/2024
manjummel boys director chidambaram meets dhanush

இயக்குநர் சிதம்பரம் இயக்கத்தில் சௌபின் ஷாஹிர், ஸ்ரீநாத் பாசி, பாலு வர்கீஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 22 ஆம் தேதி வெளியான மலையாளப் படம் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’. பரவா பிலிம்ஸ் தயாரிப்பில் உருவான இப்படத்திற்கு சுஷின் ஷ்யாம் இசையமைத்துள்ளார். இப்படம் உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2006 ஆம் ஆண்டு கொடைக்கானலுக்கு சுற்றுலா வரும் கேரள இளைஞர்கள், ஒரு இக்கட்டான சூழ்நிலையில் சிக்கி அதிலிருந்து எப்படி மீள்கின்றனர் என்ற சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

சர்வைவல் த்ரில்லர் ஜானரில் வெளியாகியுள்ள இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. தமிழிலும் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். குணா குகையில் நடக்கும் கதை என்பதால் கமல் நடித்த குணா பட பாடல் ‘கண்மணி அன்போடு காதலன்...’ பாடலை படக்குழு படத்தில் பயன்படுத்தியுள்ளது. அதனால் தமிழ்நாட்டிலும் சென்னை, கோவை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் படத்தை திரையிட திரையரங்குகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுவரை 7 நாட்களில் ரூ. 50 கோடி வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறுகிய நாட்களில் ரூ.50 கோடி வசூலித்த மலையாள படங்களில் ஒன்றாக இப்படம் பேசப்படுகிறது. 

இப்படத்திற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவரது எக்ஸ் பக்கத்தில் பாராட்டு தெரிவித்திருந்தார். இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாகச் சென்னை வந்த மஞ்சும்மல் பாய்ஸ் படக்குழு அவரை நேரில் சந்தித்துப் பேசினர். இதனிடையே கமல்ஹாசன் படக்குழுவை நேரில் அழைத்துப் பாராட்டியுள்ளார். மேலும் அவர்களுடன் படமும் பார்த்து படக்குழுவை பாராட்டியுள்ளார். இந்த நிலையில், இயக்குநர் சிதம்பரம் தனுஷை சந்தித்துள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து, “அன்புக்கும் வரவேற்புக்கும் நன்றி” எனக் குறிப்பிட்டுள்ளார்.