/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/145_26.jpg)
யோகிபாபு, இனியா, மொட்ட ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'தூக்குதுரை'. அரவிந்த் வெள்ளைப்பாண்டியன், அன்பரசு கணேசன் ஆகியோர் தயாரித்துள்ள இப்படத்திற்கு கே.எஸ்.மனோஜ் இசையமைத்துள்ளார். இப்படத்தின் டீசர் கடந்த மாதம் வெளியானது. விரைவில் இப்படம் திரைக்கு வரவுள்ளது.
இப்படம் குறித்து இயக்குநர் பேசும்பொழுது, "இந்த படம் ஒரு மன்னர் சம்பந்தப்பட்ட படம் என்பதால் இப்படத்திற்கு மன்னன், மாமன்னன் என மன்னர் சார்ந்த தலைப்பு வைக்க முயற்சி செய்தோம். ஆனால் எங்களுக்கு அப்படி வைக்க அனுமதி கிடைக்கவில்லை. எனவே மன்னர் என்ற வார்த்தையை துரை என்றும் அழைப்பர். அதனால் இப்படத்திற்கு தூக்குதுரை என்று பெயர் வைத்தோம். இந்தப் படத்தில் ஒரு கிரீடம் வருகிறது. அந்த கிரீடத்தை தூக்கி மக்கள் முன் காட்டுவது என்பது கதையில் ஒரு பிரதான விஷயம். அதன் காரணமாக தூக்குதுரை என்ற டைட்டில் படத்திற்கு சரியாக இருக்கும் என்று எண்ணி இப்படி பெயர் வைத்தோம்.
யோகிபாபு படப்பிடிப்புக்கு சரியாக ஒத்துழைப்பு கொடுக்காதது குறித்து பலர் என்னிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டனர். அவர் மற்ற படங்களுக்கு எப்படியோ என்பது எனக்கு தெரியாது. ஆனால் என் படத்திற்கு அவர் முழு ஒத்துழைப்பு கொடுத்தார். எந்த நேரத்திலும்எந்த ஒரு இடத்திலும் எந்த துன்பமும் கொடுக்காமல் அவர் வேலையை சிறப்பாக செய்து விட்டு எங்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்துள்ளார்.
இப்படத்தின் நாயகிக்கு சமகாலம், பிளாஷ்பேக் என இரு வேறு காலகட்டம் இருப்பதால் பிளாஷ்பேக்கில் சற்று மெலிந்து இளமையாகவும் சமகாலத்தில் முதிர்ந்து வயதான தோற்றத்திலும் தெரியவேண்டும் என்பதற்காக நடிகை இனியாவை நாங்கள் தேர்வு செய்தோம். அந்த கதாபாத்திரத்தை அவர் சிறப்பாக கையாண்டு இருக்கிறார். இந்த படம் முழுக்க முழுக்க ஒரு காமெடி படமாக நாங்கள் உருவாக்கி இருக்கிறோம். இது ரசிகர்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும் என்று நம்புகிறோம்" என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)