ADVERTISEMENT

'வங்கக் கடலில் உருவானது காற்றழுத்தத் தாழ்வு பகுதி'- சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல்!

01:02 PM Sep 13, 2020 | santhoshb@nakk…

ADVERTISEMENT

வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் ஆந்திர கடல் பகுதியில் காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி மேற்கு வடமேற்கு திசையில் ஆந்திராவை நோக்கி நகரக்கூடும். காற்றழுத்தத் தாழ்வு பகுதி காரணமாக வட தமிழகம் மேகமூட்டத்துடன் காணப்படும். காற்றழுத்தத் தாழ்வு பகுதி காரணமாக ஒரு சில மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

நீலகிரி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, சேலம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகரில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்; லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. இவ்வாறு சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT