ADVERTISEMENT

மகளுக்குத் தொடர்ந்து தொந்தரவு... குடும்பத்தினர் எடுத்த விபரீத முடிவு!

10:07 AM Jun 08, 2020 | Anonymous (not verified)

ADVERTISEMENT


கடலூர் மாவட்டம் சிதம்பரம் வ.உ.சி தெருவைச் சேர்ந்தவர் அன்பழகன்(21). இவர் அரங்கநாதன் நகரைச் சேர்ந்த பாபு என்பவரது மகள் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவியைக் காதலித்து வந்துள்ளதாகவும், இதனால் அவருக்குத் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததாகவும் கூறப்பட்டு வந்த நிலையில் வாலிபர் அன்பழகன், பாபு வீட்டில் கைகள் கட்டப்பட்ட நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் பிணமாகக் கிடந்தார். இந்நிலையில் தகவலறிந்த காவல்துறையினர் பிரேதத்தைக் கைப்பற்றி 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தலைமறைவாக இருந்த குடும்பத்தினரை தேடி வந்தனர். இதில் பாபு மனைவி சத்யா, மகன் ஜீவா, மகள் சுவேதா ஆகிய 4 பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

ADVERTISEMENT


அவர்களிடம் நடத்தப்பட்ட தொடர் விசாரணை குறித்து சிதம்பரம் டி.எஸ்.பி. கார்த்திகேயன் கூறுகையில், "வ.உ.சி தெருவைச் சேர்ந்த அன்பழகன் ரங்கநாதன் நகரைச் சேர்ந்த பாபு என்பவரது மகளைக் காதலித்து வந்ததால் அவரைப் பலமுறை பாபு குடும்பத்தினர் எச்சரித்தும், பேசியும் பலன் இல்லாமல் போனது. இதையடுத்து அன்பழகன் மீது காவல் நிலையத்தில் பாபு குடும்பத்தினர் புகார் அளித்துள்ளனர். பின்னர் காவல் நிலையத்தில் அன்பழகனை அழைத்துக் கண்டித்து அனுப்பி வைத்தனர்.

ஆனால் அவர் இதனை மாற்றிகொள்ளாமல் மீண்டும் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததால், தாய் தந்தைக்குத் தெரியாமல் மகள் அவருடன் பழகி வந்ததாகவும், இந்நிலையில் அன்பழகனை ஏதாவது செய்தால் தான் இந்தப் பிரச்சனைக்கு முடிவு வரும் எனக் கருதி அன்பழகனுக்கு மகளை விட்டுப் போன் செய்யச் சொல்லி வீட்டுக்கு வரவழைத்து அவரை கொலை செய்யத் திட்டம் தீட்டியுள்ளனர் பாபு குடும்பத்தினர்.


வீட்டுக்கு வந்தவர் பாபுவின் மகளிடம் நீ யாரிடமாவது தொடர்பில் இருக்கிறாயா என ஆபாச வார்த்தைகளால் அன்பழகன் திட்டியதால் மகன் ஜீவா அவர் கையில் இருந்த அரிவாளால் பின் தலையில் வெட்டியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த அன்பழகன் அங்கேயே இறந்து போனார். இதனை மறைக்க குடும்பமே திட்டம் தீட்டியது. இதுபற்றி தகவல் அறிந்த நாங்கள் மேற்கொண்டு தனிப்படை அமைத்து விசாரணையை துவக்கினோம். அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த தந்தை பாபு, தாய் சத்தியா, இவர்களது பிள்ளைகள் மகன்(17), மகள்(16) 4 பேரையும் கைது செய்து வாக்குமூலம் பெற்று அவர்களைச் சிறையில் அடைத்துள்ளோம். அவர்களது மகன் சிறுவன் என்பதால் பண்ருட்டி சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கும், மகள் கடலூர் சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்" எனக் கூறினார்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT