A female police inspector attempted suicide in the police station itself

கடலூரில் காவல் நிலையத்திலேயே காவல் உதவி ஆய்வாளர் தற்கொலை முயற்சி ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் காவல் நிலையத்தில் சுகன்யா என்பவர் உதவி காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் நேற்று திடீரென விழுப்புரம் காவலர் பயிற்சி பள்ளிக்கு இடமாற்றப்பட்டார். தனக்கான பணியிடமாற்றம் குறித்து உயர் அதிகாரிகளிடம் கேட்டபோது எந்தவித தகவலும்தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட அவர், காவல் நிலையத்திற்கு வந்து அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு மயங்கி விழுந்தார். இதனையறிந்த சக போலீசார் உடனடியாக அவரை மீட்டு புதுவையில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஒன்றுக்கு அழைத்துச் சென்றனர். உடனடியாக அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. காவல் நிலையத்திலேயே பெண் உதவி காவல் ஆய்வாளர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisment