கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே குழந்தை சிவப்பாக பிறந்ததால்மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்ட கணவன் மனைவியை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

CUDDALORE

Advertisment

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவிலை அடுத்தமாளிகைமேடு பகுதியில் வசித்து வந்தவர்கள் சுரேஷ் அமலா தம்பதியினர். இவர்கள் இருவருக்கும் 5 மாத ஆண் குழந்தை ஒன்றுஉள்ள நிலையில் அடிக்கடி சுரேஷ் வரதட்சணை கேட்டும், குழந்தை சிவப்பாக உள்ளதால் மனைவியான அமலாவின் நடத்தையில் சந்தேகப்பட்டும்சண்டையிட்டும்வந்ததாக கூறப்படுகிறது.

CUDDALORE

Advertisment

இந்நிலையில் நேற்று அமலா நீண்ட நேரமாகியும் வீட்டை விட்டு வெளியேவராததால் அக்கம் பக்கத்தினர் சென்று பார்த்துள்ளனர். அப்போது 5 மாத குழந்தையின் அழுகுரல் மட்டும் கேட்க படுக்கையில் இறந்த நிலையில் கிடந்துள்ளார் அமலா. இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் அமலாவின் உடலை மீட்ட போலீசார் அவரது உடலைபிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

CUDDALORE

தலைமறைவான சுரேஷை போலீசார் தேடிவந்த நிலையில் காவல்நிலையத்தில் சரணடைந்த சுரேஷ்குழந்தை சிவப்பாக பிறந்ததால் மனைவியின் நடத்தை மீது ஏற்பட்ட சந்தேகத்தில் ஆத்திரத்தில் தலையணை வைத்து அழுத்தி கொலை செய்ததாக ஒப்புக்கொண்டான். அதனையடுத்து போலீசார் அவன் மீது வழக்குபதிவு செய்து சிறையில் அடைத்தனர்.