Skip to main content

”சப்பாத்தி வேண்டும்...” - கோரிக்கை வைத்த தொழிலாளர்கள், நிறைவேற்றிய ஆட்சியர்

Published on 22/04/2020 | Edited on 22/04/2020
n

 

கடலூர் மாவட்டம் ராமநத்தம், அரங்கூர், தொழுதூர் பகுதிகளில் நோபாளம், மகாராஷ்டிரா, உத்திரபிரதேசத்தைச் சேர்ந்த கூர்கா, கட்டிட வேலை செய்துவந்த சுமார் 50 குடும்பங்களைச் சேர்ந்த வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தமிழக அரசு கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை முன்னிட்டு 144 தடை உத்திரவு பிறப்பித்து உள்ள நிலையில் அவர்கள் தங்கள் வாழ்வாதாரம் பதிக்கப்பட்டு உணவு இல்லாமல் சிரமப்பட்டனர்.

 

n

 

ராமநத்தம்  மற்றும் தொழுதூர் கிராம நிர்வாக அலுவலர்கள் வினோத் குட்டிகண்ணா, ராசு ஆகியோர் திட்டக்குடி வட்டாட்சியர்  செந்தில்வேலன்  சமூகநல வட்டாட்சியர்  ரவிச்சந்திரன் ஆகியோரின் வேண்டுகோளுக்கிணங்க ராமநத்தம் ஊராட்சி மூலம் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டு  மேற்படி மக்களுக்கு மூன்று வேளையும் கடந்த 10 நாட்களாக உணவு வழங்கப்பட்டு வந்தது.  
 

nakkheeran app



இந்த நிலையில் இந்த வட மாநிலங்களைச் சேர்ந்த ஒருவர்,  கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையை கட்டணமில்லா  தொலைபேசி எண் மூலம் தொடர்புகொண்டு பேசியுள்ளார்.   அப்போது,  தங்களுக்கு மூன்று வேளையும் அரிசி சாதம் வழங்குகிறார்கள். அதை எங்களால் சாப்பிட முடியவில்லை. எனவே எங்களுக்கு மூன்று வேளையும் சப்பாத்தி வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

 

nr

 

இதை மாவட்ட ஆட்சியர் கவனத்திற்கு கொண்டு செல்லுமாறு அங்கிருந்த அதிகாரிகளிடம் பேசியுள்ளனர். இந்த செய்தி ஆட்சியர் அன்புச்செல்வன் கவனத்திற்கு அலுவலர்கள் கொண்டு சென்றுள்ளனர்.  இதையடுத்து மாவட்ட ஆட்சியர்,  ராமநத்தம் பகுதியில் உள்ள  கிராம பொது மக்கள் சமூக ஆர்வலர்களிடம் அவர்களுக்கு உதவிசெய்யுமாறு வலியுறுத்தியதன் பெயரில்,  நேற்று ராமநத்தம், சமூக ஆர்வலரும் ஹோட்டல் உரிமையாளருமான ஈஸ்வரி அய்யம் பெருமாள் மற்றும் கவிதா, நிர்மலா, முருகேசன் ஆகியோர் அடங்கிய சமூக ஆர்வலர் குழுவினர் மற்றும் பலாஜி , கண்ணதாசன் மற்றும் அரங்கூர் ஊராட்சி மன்ற தலைவர் ராஜா, அரங்கூர் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் செல்வம், தொழுதூர் ஊராட்சி மன்ற தலைவர் குணசேகரன், தொழுதூர் உராட்சி மன்ற துணைத்தலைவர் ரியாஸ்பானு அன்சாரி மற்றும் மாயக்கிருஷ்ணன், கோவிந்தசாமி ஆகியோர் சுமார் 50,000 மதிப்பிலான காய்கறி, 100 கிலோஅரிசி, கோதுமை மாவு, மளிகை பொருட்கள் ஆகியவற்றை சேலம் மாவட்டம் தலைவாசல் சென்று மினி டெம்போ மூலம் கொள்முதல் செய்து கொண்டுவந்து, மங்களூர் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜாராமன் அவர்கள் முன்னிலையில் அந்த உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த வடமாநில தொழிலாளர்களிடம் வழங்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான உணவு பொருட்கள் வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  

சார்ந்த செய்திகள்