விழுப்புரம் மாவட்டம் காட்டு எடையார் கிராமத்தைச் சேர்ந்த பூபாலன் மகள் தன்விகா(4). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் எல்கேஜி படித்து வந்தார் வழக்கம்போல இவர் அந்த பள்ளியின் வாகனத்தில் தினசரி சென்று வருவது வழக்கம்.

Advertisment

villupuram incident

அதே போல் நேற்றும் பள்ளிக்கு பஸ்சில் சென்று திரும்பி வரும்போது அவரது வீட்டு அருகே மாணவியை பஸ்சில் இருந்து இறக்கி விட்டுள்ளனர். மாணவியை இறக்கி விட்ட பஸ் டிரைவர் மணி பஸ்சை பின்னோக்கி திருப்பும்போது மாணவி மீது பஸ் ஏறி சம்பவ இடத்திேலயே மரணமடைந்தார். டிரைவரின் கவனக்குறைவால் 4 வயது சிறுமி இறந்தது கண்டு ஊர் மக்கள் சோகமாகினர்.

இதுபற்றி திருக்கோவிலூர் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள். பொதுவாக பஸ், வேன்களில் தனியார் பள்ளிகளுக்கு தங்கள் பிள்ளைகளை அனுப்பும் பெற்றோர்கள் மிகவும் கவனமாக பஸ் ஏற்றி அனுப்பும் போதும் திரும்பி வந்து இறங்கும் போதும் அருகில் இருந்து பாதுகாப்பாக வீட்டுக்கு அழைத்துச் செல்லாமல் அலட்சியம் செய்வதாலேயே இதுபோன்ற சிறுமிகள் குழந்தைகள் மரணம் ஒரு தொடர்கதையாகவே நடந்து வருகின்றன.