ADVERTISEMENT

அரசின் கொடூரம் - ரேஷன் கடையில் மூதாட்டி பரிதாப பலி!

09:47 AM Jun 18, 2019 | kalaimohan

திருவண்ணாமலை மாவட்டம், மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகம் அமைந்துள்ள வேங்கிக்கால் கிராமத்துக்கு அருகில் உள்ள கிராமம் இனாம்காரியந்தல். இந்த கிராமத்தில் உள்ள அரசு நியாயவிலைக்கடைக்கு உட்பட்டு 900 குடும்ப அட்டைகள் உள்ளன.

ADVERTISEMENT



ADVERTISEMENT

இந்த குடும்ப அட்டைகளுக்கு தமிழக உணவு வழங்கல்துறை அனுப்பும் அரிசி, பருப்பு, சர்க்கரை போன்றவற்றை 100 சதவிதம் அனுப்புவதில்லை. 70 முதல் 75 சதவிதம் வரை மட்டும்மே பொருட்கள் அனுப்புகிறது. இதனால் 25 சதவித குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருட்கள் அரசாங்கம் அனுப்புவதில்லை. இந்த பற்றாக்குறையால் முதலில் வருபவர்களுக்கு பொருட்கள் வழங்குவது என்கிற வழக்கத்தை நியாய விலைக்கடை பணியாளர்கள் கடைப்பிடிக்கின்றனர். 25 சதவித ஏழை மக்கள் பொருட்கள் கிடைப்பதில்லை என்பதால் விடியற்காலை நேரத்திலேயே கடை முன் சென்று வரிசைக்கட்டி அமர்ந்துவிடுகின்றனர்.

அப்படித்தான் கடந்த ஜீன் 17ந்தேதி விடியற்காலை இனாம்காரியந்தல் காலணி பகுதியை சேர்ந்த 60 வயது மூதாட்டியான தனபாக்கியம் என்பவர், அரிசி வாங்குவதற்காக விடியற்காலை 3 மணிக்கு நியாயவிலைக்கடை வாயிலில் பொருள் வாங்குவதற்காக வரிசைக்கட்டி உட்கார்ந்து இருந்தவர்களோடு உட்கார்ந்துள்ளார்.



காலை 10 மணிக்கு நியாயவிலைக்கடை பணியாளர் வந்து கடையை திறந்ததும், நான், நீ என பொருள் வாங்க முண்டியடித்துள்ளனர். அந்த தள்ளுமுள்ளுவில் பசியோடு காத்திருந்த தனபாக்கியம், கீழே விழுந்துள்ளார். அவர்மீது சில கால்கள் மிதித்துள்ளன. அதற்குள் கீழே விழுந்த அவரை மீட்டு தண்ணீர் தெளித்து எழுப்ப முயன்றுள்ளனர். அவர் அப்போதும் எழுந்திருக்காததால் உடனடியாக திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு ஆட்டோவில் உறவினர்கள் கொண்டு வந்துள்ளனர்.

அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டார் எனக்கூறியுள்ளனர். இதனால் அவரது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். அந்த கிராம மக்கள் திருவண்ணாமலை – வேலூர் சாலையில் நின்று அரசு எதிராக கோஷமிட்டனர்.

அதிக குடும்ப அட்டைகள் ஒரே நியாயவிலைக்கடையில் இருப்பதால் தான் இந்த சிக்கல். அதனால் கடையை இரண்டாக பிரிக்க வேண்டும் என்கிற கோரிக்கையை முன்வைத்து கோஷங்கள் எழுப்பினர். இதுப்பற்றி கேள்விப்பட்டு உணவு பொருள் வழங்கல் துறை அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள், காவல்துறையினர் சென்று பேச்சுவார்த்தை நடத்தி மூதாட்டியின் உறவினர்கள் மற்றும் பொதுமக்களை சமாதானம் செய்து நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி தந்து போராட்டத்தை கைவிட செய்தனர்.


இந்த பிரச்சனையால் தற்போது அக்கிராமத்தில் பலத்த போலிஸ் பாதுகாப்பு போட்டப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT