திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த ஆலத்தூர் கிராமத்தில் விவசாய கிணறு வெட்டும் பணி நடைபெற்றுள்ளது. ஏப்ரல் 19ந்தேதி மாலை 5 மணியளவில் கிணற்றில் 6 பேர் வேலை செய்துக்கொண்டிதிருந்தனர். வேலை செய்துக்கொண்டிருந்தபோது, கிணற்றுக்குள் இருந்து இருவர் மண் அள்ளும் பக்கெட் வழியாக மேலே வந்துள்ளனர். உச்சிக்கு வரும்போது மண் மற்றும் இரண்டு தொழிலாளிகளுடன் வந்தபோது சடாரென ரோப் அறுந்து விழுந்துள்ளது. ரோப் அறுந்ததால் பக்கெட் கிணற்றுக்குள் விழுந்தது.
இதில் கிணற்றுக்குள் இருந்த 4 தொழிலாளர்கள் மீது விழ அவர்கள் நசுங்கினர். அவர்கள் விழுந்த வேகத்தில் மண் சரிந்தது. இதில் தொழிலாளர்கள் தணிகாசலம், ரவிச்சந்திரன், ஜெயமோகன், பிச்சாண்டி, வேலு ஆகியோர் சம்பவயிடத்திலேயே இறந்தனர். அதிக காயம்பட்டு ஒருவர் அலறியுள்ளார். அவரை உடனே மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அவரும் பாதி வழியிலேயே இறந்துள்ளார்.
கிணற்றுக்குள் இறந்தவர்களின் உடலை அக்கிராம மக்கள் உதவியுடன் மேலே கொண்டு வந்தனர். அவர்களது உடல் உடற்கூராய்வுக்காக மருத்துமனைக்கு கொண்டு சென்றனர். இறந்தவர்களின் உறவினர்கள் கதறல் அந்த பகுதி மக்களை கண்ணீர் சிந்த வைத்துள்ளது. சம்பவயிடத்தில் பெரும் பதட்டம் நிலவுவதால் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிபிசக்கரவர்த்தி சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். வேறு பிரச்சனைகள் ஏற்பட்டு விடக்கூடாது எனநூற்றுக்கும் அதிகமான போலிஸார் பாதுகாப்புக்காக அங்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2019-02/02 Raja.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2019-04/zz14.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2019-04/zz18.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2019-04/zz15.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2019-04/zz16.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2019-04/zz17.jpg)