திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகரம் சைதாப்பேட்டை அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவன் அரி. ஆரணி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளான்.

Advertisment

ஜீன் 19ந்தேதி காலை முதலே மாணவனுக்கு காய்ச்சல் இருந்து வந்துள்ளது, அதோடு வயிற்று வலியும் இருந்துள்ளது. மருத்துவமனைக்கு செல்ல தயங்கிக்கொண்டு பள்ளி அருகிலுள்ள மருந்துக்கடையில் காய்ச்சலுக்கும், வயிற்றுவலிக்கும் மாத்திரை வாங்கி வந்து சக மாணவர்கள் தந்துள்ளனர். அவனும் சாப்பிட்டுள்ளான். அப்படியும் வயிற்று வலி குறையவில்லையாம்.

school student

இதனால் ஜீன் 19ந்தேதி இரவு ஆரணி அரசு மருத்துவமனையில் கொண்டு வந்து அவனது பெற்றோர் சேர்த்துள்ளனர். அங்கு சிகிச்சை அளிக்காமல் காலம் தாழ்த்தியுள்ளனர் அங்கு பணியில் இருந்த ஓரிரூ மருத்துவர்கள். இதனால் ஜீன் 20ந்தேதி விடியற்காலை மருத்துவமனையிலேயே தாமதமாக வழங்கப்பட்ட சிகிச்சை, மருத்துவர் சிபாரிசுயில்லாமல் மருந்து வாங்கி சாப்பிட்டது போன்றவற்றால் அந்த மாணவன் இறந்துள்ளான்.

Advertisment

school student

இதனால் ஆத்திரம் அடைந்த அரியின் உறவினர்கள் மருத்தவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். உடனடியாக காவல்துறையினர் மற்றும் மருத்துவ அதிகாரிகள் அங்கு வந்து தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கிறோம் என வாக்குறுதி தந்து மாணவன் உடலை மதிய வாக்கில் தந்து அனுப்பினர்.

மருத்துவர் பரிந்துரையில்லாமல் மாத்திரை வழங்கி மருந்துக்கடை உரிமையாளர், விற்பனையாளரை போலிஸார் விசாரணைக்கு காவல்நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இது ஆரணி பகுதியில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.