
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 18,023 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 1,437 பேருக்கு கரோனா கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் தொடர்ந்து 1000க்கும் அதிகமான கரோனா தொற்று பதிவாகி வருகிறது. பிற மாவட்டங்களிலும் பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து இருந்து வருகிறது. இன்றைய பாதிப்புக்களையும் சேர்த்து தமிழகம் முழுவதும் இதுவரை 22,74,704 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று மட்டும் சிகிச்சை பெற்று குணமானவர்களின் எண்ணிக்கை 31,045 ஆக உள்ளது. இதன் மூலம் இதுவரை குணமானவர்களின் மொத்த எண்ணிக்கை 20,28,503 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 409 ஆக உள்ளது. இதன் மூலம் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 27,765 ஆக அதிகரித்துள்ளது. இன்று தமிழகம் முழுவதும் 1,70,112 கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. மொத்தமாக தமிழ்நாட்டில் இதுவரை 2,90,62,609 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.