திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் ஏற்கனவே வருமானவரித்துறையினர் சோதனை மேற்கொண்டிருந்த நிலையில்இன்று அதிகாலைதுரைமுருகன் மகன் கதிர் ஆனந்துக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர்சோதனையில் ஈடுபட்டனர். இந்த அதிரடி சோதனைக்கு பிறகு தற்போது 10 லட்சம் ரூபாய்பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.

Advertisment

 10 lakhs seized by the Income Tax Department at Duraimurugan's house

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

வேலூரில்திமுக பொருளாளர் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்துக்கு சொந்தமான பிஇகல்லூரி, சிபிஎஸ்சி பள்ளியில் வருமானவரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு, சோதனை முடிந்தபின் இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த திமுக பொருளாளர் துரைமுருகன்,

Advertisment

 10 lakhs seized by the Income Tax Department at Duraimurugan's house

வீட்டிற்கு வந்த அதிகாரிகள் முதலில் வருமான வரித்துறையினர் என கூறினர். பின்னர் தேர்தல் பறக்கும் படை என கூறினர். இப்படி மாறி மாறி அதிகாரிகள் பேசியதால் வாக்குவாதம் ஏற்பட்டது.இரவு 10 மணிக்கு மேல் சோதனையிடக்கூடாது என சட்டம் இருக்கிறது என கூறிய பிறகுவிடியற்காலை 3 மணிக்கு ஒரு ஆர்டெரை வாங்கிக்கொண்டு வந்து காண்பித்தனர். அதன்பின் அந்த உத்தரவை பார்த்தபின் எங்களுக்கு எந்தசந்தகேமும் இல்லை சர்ச் செய்துகொள்ளுங்கள் என்று விட்டுவிட்டோம். களத்தில் எங்களை எதிர்கொள்ள முடியதாக மத்திய, மாநில அரசின் துணையில் இருக்கும் சில கலைந்தெடுத்த அரசியல்கழிசடைகள் என் மகனின் வெற்றியைதடுத்து நிறுத்த வேண்டும், எங்களுக்கு மனஉளைச்சல் தரவேண்டும் என செய்த சூழ்ச்சி இது எனகூறியிருந்தார்.

இந்த சோதனையின் போது இரண்டு பைகளில் ஆவணங்கள் கொண்டு செல்லப்பட்டதாக கூறப்பட்டநிலையில் தற்போது அவர் வீட்டில் 10 லட்சம் ரூபாயை வருமானவரித்துறைபறிமுதல் செய்யதாக தகவல்கள் வந்துள்ளன.