ADVERTISEMENT

தொடரும் காவல்துறை வாகன ஓட்டிகளிடையான மோதல்கள்..!

02:08 PM Jun 09, 2021 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

திருவாரூரில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த காவல்துறை ஆய்வாளரிடம் தகாத வார்த்தைகளால் பேசி ரகளையில் ஈடுபட்ட போதை ஆசாமியால் பரபரப்பு ஏற்பட்டது.

கரோனா வைரஸ் பரவலைக் கட்டுபடுத்தும் விதமாக தமிழ்நாட்டில் சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. இந்தச் சூழ்நிலையில், திருவாரூர் நகரப் பகுதியான கீழ வீதி பகுதியில் அத்தியாவசியத் தேவையின்றி சுற்றித் திரிபவர்களைத் தடுக்கும் விதமாக நகரக் காவல் நிலைய காவல் ஆய்வாளர் ரமேஷ் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் தள்ளாடியபடி வந்த நபரைத் தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்டார்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மதுபோதையில் வாகனத்தை ஒட்டிவந்தது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து அவரது இருசக்கர வாகனத்தை ஆய்வாளர் ரமேஷ் பறிமுதல் செய்தார். இதனால் ஆத்திரமடைந்த போதை ஆசாமி, காவல் ஆய்வாளர் ரமேஷ் மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த காவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, சாலையில் நின்று தகாத வார்த்தைகளால் பேசினார். இது திருவாரூர் கீழ வீதி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. காவல்துறையினர் செய்வதறியாது திகைத்து நின்றனர்.

நேற்று முன்தினம் (07.06.2021) கும்பகோணத்தை அடுத்துள்ள திருநாகேஸ்வரம் பகுதியில் முகக்கவசம் அனியாமல் வந்த அமமுக பிரமுகர் ஒருவரை போலீசார் இடைமறித்து, மாஸ்க் போடாமல் வரலாமா என கேட்க, காவல்துறையினருக்கும் அமமுக பிரமுகருக்கும் வாய்வார்த்தை வாக்குவாதமாகி, பிறகு கைகலப்பாகி அடித்துக்கொள்ளும் அளவிற்கு சென்றுவிட்டது.

அமமுக பிரமுகர் பிரபு மீது பல வழக்குகள் பதிவுசெய்து கைது செய்துள்ளனர். தொடர்ந்து காவல்துறைக்கும் பாதைசாரிகளுக்கும் இடையே மோதல் உருவாகிவருவது பரபரப்பாகியுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT