ADVERTISEMENT

ஊராட்சி ஒன்றியங்களில் பணி செய்து வரும் கணினி இயக்குனர்களை பணி நிரந்தரம் செய்ய கோரிக்கை

01:27 PM Sep 21, 2020 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனைத்து பணியாளர்கள் மற்றும் ஊராட்சி செயலர்கள் அடங்கிய சிறப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் ஊராட்சிகளின் சங்க தலைவர் வெற்றிவேல் தலைமை தாங்கினார். மேலும் பல ஊரக வளர்ச்சித் துறை பணியாளர்கள் மற்றும் ஊராட்சி செயலாளர்கள் கலந்து கொண்டனர். இதில் மாவட்ட செயலாளர் ராமலிங்கம் கலந்து கொண்டு தங்கள் ஊழியர்களின் கோரிக்கை குறித்து விரிவாக எடுத்துரைத்தார். அப்போது ஊழியர்கள் தரப்பில் அரசுக்கு வைத்த கோரிக்கைகள் பற்றி இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது.

அதில் ஸ்ரீமுஷ்ணம் ஒன்றியத்தில் உள்ள 41 ஊராட்சிகளை சேர்ந்த ஊராட்சி செயலாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், தூய்மை காவலர்கள், குடிநீர் வாட்டர் டேங்க் இயக்குனர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் தமிழக அரசு கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் எங்களைப்போன்ற பணியாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை செய்வதாக அறிவித்து அறிவிப்போடு மட்டும் உள்ளது. அதற்கான அரசாணையை வெளியிட வேண்டும். மாவட்ட வட்டார சுகாதார ஒருங்கிணைப்பாளர்களுக்கு இளநிலை உதவியாளருக்கு இணையான பணி நியமனம் வழங்க வேண்டும். ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் நீண்ட காலமாக கணினி இயக்குபவர்கள் ஒப்பந்த தொழிலாளர்களாக மட்டுமே பணி செய்து வருகின்றனர். அவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். இப்படி பல்வேறு தீர்மானங்கள் இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன.

பொதுவாக வருவாய்த்துறை ஊரக வளர்ச்சித் துறை சுகாதாரத்துறை இப்படி பல்வேறு துறைகளில் ஊழியர்கள் பற்றாக்குறை நிறைய உள்ளன. ஒவ்வொரு அலுவலகங்களிலும் ஒரு சிலர் மட்டுமே நிரந்தரப் பணியாளர்களாக உள்ளனர். அங்கு பணி செய்யும் பலர் ஒப்பந்த பணியாளர்களாக வேலை செய்து வருகிறார்கள். அப்படி நீண்டகாலம் ஒப்பந்த பணியாளர்களாக வேலை செய்து வருவோர் அனைவரையும் பணி நிரந்தரம் செய்து அரசு அலுவலகங்களில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பி பொதுமக்களின் தேவைகளை உடனுக்குடன் தீர்த்து வைக்க வேண்டும் என்று நீண்ட காலமாகவே கம்யூனிஸ்ட் இயக்கங்கள் உட்பட பல்வேறு இயக்கங்கள் போராடி வருகின்றன தமிழக அரசு இதற்கு நிரந்தரத் தீர்வு காணுமா என்றும் தெரிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT