ADVERTISEMENT

தமிழகத்தில் மாணவர்கள் போராட்டங்கள் நடத்த தடை கோரிய வழக்கு!- மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு!

01:27 PM Feb 03, 2020 | santhoshb@nakk…

தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டங்கள் நடத்த தடை கோரிய மனுவுக்குப் பதிலளிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ADVERTISEMENT

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதேபோல, சென்னை பல்கலைக்கழகம் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்களும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

ADVERTISEMENT

கல்வி நிறுவன வளாகங்களிலோ, பொது இடங்களிலோ மாணவர்கள் போராட்டங்கள் நடத்த தடை விதிக்கக்கோரி சென்னையைச் சேர்ந்த வராகி என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அந்த மனுவில், பருவத் தேர்வுகள் நெருங்கி வரும் நிலையில், மாணவர்கள் போராட்டத்தால் அவர்களின் படிப்பு மட்டுமல்லாமல், போக்குவரத்துக்கு இடையூறும் ஏற்படுவதால் பொது மக்களும் பாதிக்கப்படுகின்றனர் என மனுவில் தெரிவித்துள்ளார்.


அரசியல் கட்சியினரால் மூளைச் சலவை செய்யப்பட்டு, அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக சென்னை பல்கலைக்கழக மாணவர்களுக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய மனுதாரர், பல்கலை விதிகளுக்கு முரணாகச் செயல்படும் மாணவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரியுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT