family card chennai high court order

தமிழகத்தில் குடும்ப அட்டைகள் இல்லாத வெளி மாநிலத்தவர்களைக் கணக்கெடுத்து அவர்களுக்கும் உதவிகள் வழங்க வேண்டுமென தமிழக அரசுக்குச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisment

கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், அமைப்பு சாரா தொழிலாளர்களான கட்டுமானத் தொழிலாளர்கள், தினக்கூலிகள், வெளி மாநிலங்களில் இருந்து புலம் பெயர்ந்து வந்து பணியாற்றும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

Advertisment

இவர்களுக்குத் தமிழகத்தில் குடும்ப அட்டைகள் இருக்காது என்பதால், அவர்களின் ஆதார் அட்டை, ஓட்டுனர் உரிமம் உள்ளிட்ட அடையாள அட்டைகளின் அடிப்படையில், உணவு தானியங்களை விநியோகிக்க தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி அருள் அரசு என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் நிர்மல்குமார் அமர்வு முன்பு வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், தமிழகத்தில் குடும்ப அட்டை இல்லாத நபர்களை உடனடியாகக் கணக்கெடுத்து, அவர்களுக்கு உதவி வழங்கியது தொடர்பாக நீதிமன்றத்தில் வரும் மே 20- ஆம் தேதிக்குள் அறிக்கை அளிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர்.