ADVERTISEMENT

ஏறும் நூல் விலை! வேலை நிறுத்தத்தில் ஜவுளி உற்பத்தியாளர்கள்! 

04:26 PM May 17, 2022 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

நூல் விலையை குறைக்க வலியுறுத்தி கரூரில் ஜவுளி உற்பத்தியாளர் மற்றும் ஏற்றுமதியாளர்கள் 2 நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கரூர் ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கம் சார்பில், பருத்தி நூல் விலையை குறைக்க வலியுறுத்தி மே16, 17 ஆகிய தேதிகளில் அடையாள வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி நேற்றும் இன்றும் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது.

இதில், நூல் உற்பத்தியாளர்கள் உற்பத்தி செய்த நூலை சந்தைப்படுத்தாமல் இருப்பு வைத்து வருகின்றனர். இதனால் சந்தையில் தேவைக்கேற்ற நூல் கிடைப்பதில்லை. அதேசமயம் நூல் ஏற்றுமதிக்கு மத்திய அரசு மானியம் அளித்து வருகிறது. இதனால் மானியத்தை நிறுத்தி, ஏற்றுமதிக்கு தடை விதிக்க வேண்டும். அப்போதுதான் சந்தைக்கு நூல் வரத்து சீராக இருக்கும். அதன் மூலம் உற்பத்தியை இயல்பாக நடத்துவதற்கு வாய்ப்பாக இருக்கும் என மத்திய மாநில அரசுகளுக்கு கோரிக்கை வைத்திருந்தனர்.

கரூர் மாநகரில் ஜவுளி உற்பத்தி ஏற்றுமதி என 800 நிறுவனங்கள், 150 நூல் வினியோகஸ்தர்கள், டையிங் மற்றும் பிரிண்டிங் நிறுவனங்கள், சிறு தையல் நிறுவனங்கள், ஜவுளி தொழில் சார்ந்த நிறுவனங்கள் உள்ளிட்டோர் இந்த வேலைநிறுத்தத்தில் கலந்து கொண்டனர். சுமார் 2. 1/2 லட்சம் ஊழியர்கள் பங்கேற்ற இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தின் காரணமாக, சுமார் 100 கோடி அளவில் உற்பத்தி பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக ஜவுளி உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT