College bus collides with truck 14 students injured!

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு பகுதியில் அமைந்துள்ள தனியார் மகளிர் கல்லூரி பேருந்து வழக்கம்போல கரூரிலிருந்து 60 மாணவிகளுடன் இன்று காலை கரூர் அடுத்த வெண்ணைமலை பகுதியில் சென்று கொண்டிருந்தது. மகளிர் கல்லூரியைச் சேர்ந்த பேருந்து ஓட்டுநர் மகேஷ் (43) என்பவர் வாகனத்தை ஓட்டிக்கொண்டு போகும்போது முன்னால் நின்று கொண்டிருந்த ஒரு அரிசி லாரியின் மீது மோதியது. இதில், 14 கல்லூரி மாணவிகளுக்கு காயங்கள் ஏற்பட்டு கரூர் அண்ணா வளைவு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Advertisment

ஏற்கனவே இந்த ஓட்டுநரின் கவனக்குறைவால் இரண்டு முறை சிறு விபத்துகள் ஏற்பட்டுள்ளதாகவும், மதுபோதையில் பேருந்தை இயக்குவதாகவும் மாணவிகளின் பெற்றோர்கள் புகார் தெரிவித்தனர். மேலும், இதுகுறித்து கல்லூரி நிர்வாகத்திடம் தொடர்ந்து புகார் அளித்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் தெரிவித்தனர். எனவே, போக்குவரத்துத் துறை இந்த விவகாரத்தில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவிகளின் பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Advertisment