/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/885_55.jpg)
கரூரில் மாநகராட்சி பள்ளி மாணவர்களுடன் அமர்ந்து காலை சிற்றுண்டி அருந்திய மாவட்ட ஆட்சியர்,உணவின் சுவை மற்றும் தரம் குறித்து கேட்டறிந்தார்.
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 40க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டம் நடைமுறையில் உள்ளது. இதில் மாநகராட்சிக்குட்பட்ட காளியப்பனூர் பகுதியில் அமைந்துள்ள ஆரம்பப் பள்ளியில் 51 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இன்று காலை அந்தப் பள்ளிக்குச் சென்ற கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேல், மாணவர்களுடன் அமர்ந்து காலை சிற்றுண்டி திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட கோதுமை உப்புமாவை சாப்பிட்டார்.
அப்போது மாணவர்களிடம் உணவில் உப்பு, காரம் எப்படி இருக்கிறது என்றும், தரமாக இருக்கிறதா என்றும் கேட்டறிந்தார். மாவட்ட ஆட்சியருடன் ஆய்வுப் பணிக்குச் சென்ற மாநகராட்சி மேயர் கவிதா கணேசன், ஆணையர் சரவணகுமார் உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் மாணவர்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)