ADVERTISEMENT

ஆளுநருடன் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா சந்திப்பு

03:57 PM Jul 13, 2023 | prabukumar@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழக தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா, ஆளுநர் ஆர்.என். ரவியை இன்று சந்தித்தார்.

தமிழகத்தின் தலைமைச் செயலாளராக இருந்த இறையன்பு கடந்த ஜூன் மாதத்துடன் ஓய்வு பெற்றார். இதையடுத்து தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளராக ஷிவ்தாஸ் மீனாவை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டு இருந்தது. அதனைத் தொடர்ந்து ஜூன் மாதம் 30 ஆம் தேதி தமிழகத்தின் 49வது தலைமைச் செயலாளராக ஷிவ்தாஸ் மீனா தனது பொறுப்புகளை ஏற்றுக்கொண்டார்.

இந்நிலையில் தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளராகப் பொறுப்பேற்றுக்கொண்ட ஷிவ்தாஸ் மீனா, தமிழக ஆளுநர் ஆர்.என். ரவிவை இன்று மரியாதை நிமித்தமாகச் சந்தித்துப் பேசினார். முன்னதாகக் கூடுதல் தலைமைச் செயலாளராக இருந்து வந்த ஷிவ்தாஸ் மீனா 1989 ஆம் ஆண்டு பேட்ச் ஐஏஎஸ் அதிகாரி ஆவார். இவர் முதன் முதலில் காஞ்சிபுரம் உதவி ஆட்சியராகப் பணியைத் தொடங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT