Congratulations to Stalin, Chief Secretary of Tamil Nadu!

Advertisment

தமிழகத்தில் மொத்தம் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளில் பதிவான வாக்குகளையும், இடைத்தேர்தல் நடைபெற்ற கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் பதிவான வாக்குகளையும் எண்ணும் பணி இன்று (02/05/2021) காலை 08.00 மணிக்குத் தொடங்கியது. தமிழகத்தில் மொத்தம் அமைக்கப்பட்டுள்ள 75 வாக்கு எண்ணும் மையங்களில் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. முதலில் தபால் வாக்குகளும் பின்னர் வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகளும் எண்ணப்பட்டு வருகின்றன.மொத்தம் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளில் திமுக கூட்டணி 156 சட்டமன்றத் தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி 78 சட்டமன்றத் தொகுதிகளிலும் முன்னனியில் உள்ளது.

Advertisment

 Congratulations to Stalin, Chief Secretary of Tamil Nadu!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றிமுகத்தில்உள்ள நிலையில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பலர் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தமிழக அரசு உயரதிகாரிகளும்திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் ஸ்டாலினை சந்தித்து மலர்க்கொத்துகொடுத்து வாழ்த்து தெரிவித்தார். அதேபோல் காவல்துறை டிஜிபி திரிபாதியும் திமுக தலைவர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.