Skip to main content

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் காணொளி மூலம் பிரச்சாரம் செய்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

Published on 04/02/2022 | Edited on 04/02/2022

 

Chief Minister MK Stalin is campaigning through video in the urban local elections!

 

தி.மு.க. தலைமைக் கழகம் இன்று (04/02/2022) வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி சார்பில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்தும், தி.மு.க. தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் 'உள்ளாட்சியிலும் தொடரட்டும் நம்ம ஆட்சி' என்ற காணொளி பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். காணொளி தேர்தல் பிரச்சாரம் குறித்த விவரங்கள் பின்வருமாறு, 

 

பிப்ரவரி 6- ஆம் தேதி கோவை, பிப்ரவரி 7- ஆம் தேதி சேலம், பிப்ரவரி 8- ஆம் தேதி கடலூர், பிப்ரவரி 9- ஆம் தேதி தூத்துக்குடி, பிப்ரவரி 10- ஆம் தேதி ஈரோடு, பிப்ரவரி 11- ஆம் தேதி கன்னியாகுமரி, பிப்ரவரி 12- ஆம் தேதி திருப்பூர், பிப்ரவரி 13- ஆம் தேதி திண்டுக்கல், பிப்ரவரி 14- ஆம் தேதி மதுரை, பிப்ரவரி 15- ஆம் தேதி தஞ்சை, பிப்ரவரி 17- ஆம் தேதி திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் காணொளி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார்." இவ்வாறு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்